ரூ.20,000 ஊதியம்! 8ம் வகுப்பு, டிகிரி போதும்! திருச்சி உள்பட 4 மாவட்ட சட்ட ஆலோசனை அமைப்பில் வேலை
சென்னை: தமிழ்நாட்டில் திருச்சி, வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் காலியாக உள்ள சட்ட ஆலோசனை அமைப்பு பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்படும் நிலையில் விண்ணப்பம் செய்ய நாளை கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது தமிழ்நாட்டில் சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது 4 மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

திருச்சி-திருவாரூர்: திருச்சி மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணி, ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலூர்-திருவண்ணாமலை: வேலூர் மாவட்ட சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருவண்ணாலை மாவட்டத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்/ கிளர்க் பணிக்கு 2 பேர், ரிஷப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்), ஆபிஸ் பியூன் பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் கம்யூட்டர் அறிவு பெற்றிருப்பதோடுநிமிடத்துக்கு 40 எழுத்துகள் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். ரிசப்ஷன் கம் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்பண்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்பதோடு, நல்ல உரையாடல் திறன் கொண்டிருக்க வேண்டும். டெலிபோன், பேக்ஸ் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதோடு டைப்பிங் திறமையும் இருக்க வேண்டும். ஆபிஸ் பியூன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தாங்கள் பணியாற்றும் நகரை பொறுத்து சம்பளம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட்/கிளர்க், ரிசப்ஷனிஸ்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ஆபிஸ் பியூன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
நாளை கடைசி நாள்: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 16ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பும்போது படிப்பு சான்றிதழ்களுடன், பிற ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் செசன்ஸ் நீதிபதியின் தலைமையிலான குழுவினரால் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மாவட்ட வாரியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்குகளில் உள்ளது.
திருச்சி மாவட்ட பணி அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
திருவாரூர் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
வேலூர் மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
திருவண்ணாமலை மாவட்ட பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications