சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. ரூ.63000 சம்பளம்.. விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாள்
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 50 மாவட்ட நீதிபதி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. இதற்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாள் ஆகும்.

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2023 விவரம்
நிறுவனத்தின் பெயர்: சென்னை உயர் நீதிமன்றம்,
பதவியின் பெயர் : மாவட்ட நீதிபதி
காலியிடம்: 50 பதவி
விண்ணப்பம் தொடங்கும் தேதி : 01 ஜூலை, 2023
விண்ணப்பத்தின் இறுதி தேதி : 31 ஜூலை 2023
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பம்
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.mhc.tn.gov.in
மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான தோ்வுக் கட்டணத்தைச் செலுத்த கடைசி தேதி ஆகஸ்ட் 2 என்றும் அறிவிக்ககப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக மட்டுமே பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,.
வயது வரம்பு: 35 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆனால் இதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது, எஸ்சிஎஸ்டி பிரிவினர் 35 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியல் இன பிரிவைச் சேர்ந்த ஊனமுற்றோர் 60 வயது வரை விண்ணப்பிக்கலாம். பொதுவாக மற்றவர்கள் 35 வயது முதல் 47 வயது வரை விண்ணப்பிக்க முடியும். முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பாருங்கள்.
மாவட்ட நீதிபதி சம்பளம் : ரூ.51,550 - 1230 - 58,930 - 1380 - 63,070 + அலவன்ஸ்
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
சென்னை உயர்நீதிமன்ற வேலை 2023: மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான mhc.tn.gov.inல் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். தபால், மின்னஞ்சல் போன்ற இதர வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications