சென்னை ஹைகோர்ட்டில் வேலை.. மாதம் 1.31 லட்சம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்.. விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court ) தொழில் நுட்பம், அலுவல் சார்ந்த பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 1,31,500/- வரை வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் நுட்பம், அலுவல் சார்ந்த பணிகள் உள்ளிட்டவற்றில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நீதிமன்றங்களில் உள்ள இந்த பணியிடங்களை சென்னை உயர் நீதிமன்றம் வேலை வாய்ப்பு பிரிவு உரிய விதிகளின்படி உரிய அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்பி வருகிறது.

madras-high-court-recruitment-2025-41-vacancies-announced-with-salaries-up-to-rs-1-31-500-per-month

அரசு பணிக்கு தயாராகி வரும் போட்டி தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிடும் இந்த அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பதை காண முடியும். இந்த நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

ASSISTANT PROGRAMMER- என்ற டெக்னிக்கல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான கல்வி தகுதியை பார்த்தோம் என்றால் பி.எஸ்.சி,/ பிசிஏ உள்ளிட்ட பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். மென்பொருள் துறையில் மூன்று ஆண்டுகள் அனுபவம் அவசியம். அல்லது பி இ/ பிடெக்,/எம்.சி.ஏ/ உள்ளிட்ட படிப்புகளுடன் இரண்டு ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.இ/ எம் டெக் படித்து இருந்தால் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு:

எஸ்சி/எஸ்.டி, எம்பிசி, பிசி, பிசிஎம், டிசி உள்ளிட்ட பிரிவினர் 18 வயது முதல் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதாவது 01.07.1988-க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதர பிரிவினர் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். 01.07.1993 க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. முன்னாள் ராணுவத்தினர் என்றால் 47 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

எழுத்து தேர்வு (120 மதிப்பெண்கள்), திறன் தேர்வு (50 மதிப்பெண்கள்), நேர்முகத் தேர்வு (25 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கட்டணமாக ரூ. 1,000- செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

சம்பளம் எவ்வளவு?:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,900 - Rs.1,31,500/- வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேவைப்படும் நேரத்தில் இடமாற்றப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் தேர்வுகள் சென்னை மற்றும் பிற இடங்களில் நடைபெறும். இது குறித்த தகவல் தேர்வர்களுக்கு தகுந்த நேரத்தில் தரப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து தேவையான கல்வி தகுதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அதன்பிறகு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 09.09.2025- கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20171%20of%20%202025%20-%20ASSISTANT%20PROGRAMMER.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+