8 முதல் டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு.. மதுரையிலேயே பணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எழுத்து தேர்வு இல்லாத இந்த பணிக்கு நேர்க்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. 10ம் வகுப்பு முடித்திருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஒவ்வொரு மாவட்ட சமூக நலத்துறையிலும் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 Madurai District Social Welfare Office recruitment 2023 for various post including case worker and Multi purpose worker

மதுரை மாவட்ட சமூக நலத்துறையில் கேஸ் வொர்க்கர், மல்டி பர்பஸ் ஹெல்பர், செக்யூரிட்டி கார்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி கேஸ் வொர்க்கர் பணிக்கு 4 பேர், மல்டி பர்பஸ் ஹெல்பர், செக்யூரிட்டி கார்ட் பணிக்கு தலா 2 பேர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கேஸ் வொர்க்கர் பணிக்கு சமூகபணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு 8 ம் வகுப்பும், செக்யூரிட்டி கார்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.6,400 முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். வேலை வாரியாக பார்த்தால் கேஸ் வொர்க்கர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம், செக்யூரிட்டி கார்ட் பணிக்கு மாதம் ரூ.10,000, மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு ரூ.6,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் 24 மணிநேரமும் ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டி இருக்கும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai - 20 என்ற முகவரிக்கு ஜூலை 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+