டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2 மேஜர் அறிவிப்புகள்.. குரூப் 4, குரூப் 2 தேர்வு எழுதுவோர் கவனிக்க வேண்டியவை
சென்னை: 2024-ம் ஆண்டு, குரூப்-1 தேர்வு மூலம் 12 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-2, 2ஏ தேர்வு மூலம் 135 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-4 தேர்வு மூலம் 434 பின்னடைவு காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 2024-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின, பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப 50 தேர்வர்களை தேர்வு செய்துள்ளது.

மேலும், 2024-ம் ஆண்டு, குரூப்-1 தேர்வு மூலம் 12 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-2, 2ஏ தேர்வு மூலம் 135 பின்னடைவு காலிப்பணியிடங்கள், குரூப்-4 தேர்வு மூலம் 434 பின்னடைவு காலிப்பணியிடங்கள் ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், தொழில்நுட்ப பணிகளிலும் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி ஆணையத்திடம் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி பதில் பெற்று வருகிறார்கள். அந்த வகையில் மேலும் காலி பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த டிஎன்பிஎஸ்சி, அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6244லிருந்த 3247 காலி பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 9491 பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட காலி பணியிடங்களுக்கு துறை, அலகு வாரியான பகிர்மான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கணிணிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, காலி பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படடமாட்டாது" என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் ஆனால் காலி பணியிடங்கள் உயர்த்தப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஆனால் இது தவறான தகவல் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தேர்வாணையம் தேர்வர்களின் நலன் கருதி ஒவ்வொரு அறிவிக்கையிலும் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பு கூடுதல் காலி பணியிடங்களை சேர்த்த அறிவித்து வருகிறது. எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்வதற்கும் காலி பணியிடங்கள் எண்ணிக்கை உயர்விற்கும் எந்த தொடர்பும் இல்லை எனறு கூறியுள்ளது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications