ரெடியா? மாதஊதியம் ரூ.35,400 டூ ரூ.1.12 லட்சம்.. தேர்வு, இன்டர்வியூ இல்லை..தமிழகத்திலேயே எம்ஆர்பி பணி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏராளாமன பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு மற்றும் நேர்க்காணல் என்பது இல்லாத நிலையில பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Medical Service Recruitment Board or MRB) மேற்கொண்டு வருகிறது.
இதன் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வாரியம் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள் எவ்வளவு?
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள Ophthalmic Assistant பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பிரிவில் மொத்தம் 93 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை உள்பட தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு என்ன?
Ophthalmic Assistant பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்தினாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரையும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 12 வயது வரையும் தளர்வு உண்டு. விண்ணப்பத்தாரர்களின் வயது என்பது 2021 ஜூலை 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி என்ன?
இப்பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் அனுமதிபெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் Diploma Optometry படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் Ophthalmic Assistant 2 ஆண்டு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் என்ன?
இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய் வேண்டும். விண்ணப்பம் செய்ய மார்ச் 9 ம் தேதி கடைசி நாளாகும்.

எழுத்து தேர்வு, நேர்க்காணல் இல்லை
இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, டிடபிள்யூ பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு, நேர்க்காணல் எதுவும் கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்து பணிக்கு சேர்த்து கொள்ளப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்… திமுக முகாமில் கிளைமேக்ஸ் மாறுமோ? -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
4 மாவட்ட எஸ்.பிக்கள் மாற்றம்.. தேர்தல் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் அதிரடி! -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
அது விஸ்கி இல்ல! Perfume Bottle! பார்க்க மதுபாட்டில் மாதிரியே இருந்ததால் கன்பியூஷன்! நிர்மல்குமார் -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு! -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட்












Click it and Unblock the Notifications