சென்னை இராயபுரத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. அமைச்சர் ஜெயகுமார் அழைப்பு
சென்னை இராயபுரத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் சென்னையில் உள்ள படித்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டி இராயபுரத்தில் 27.2.2021 அன்று 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும் mega job fair நடைபெற உள்ளது. இடம் தூய பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராயபுரம் ரயில் நிலையம் அருகில், சென்னை 600013.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி/12ம் வகுப்பு/ ஐடிஐ/ டிப்ளமோ/பட்டப்படிப்பு/பிஇ/எம்பிஏ/செவிலியர்/பார்சிஸ்ட்/ கேட்டரிங் படித்தவர்கள்
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.

இங்கு இலவச திறன்பயிற்சிஆலோசனை வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய ஆலாசனை வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டிஎன்பிஎஸ், டிஆர்பி, பேங்க், ரயில்வே போன்றவை மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கையும் நடக்க உள்ளது. இம்முகாமில் நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி www.tnprivatejobs.tn.gov.in
இந்த மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை நல்ல முறையில் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications