கூட்டுறவுத்துறை உதவியாளர் பணி.. இவர்களுக்குமா.. அமைச்சர் பெரிய கருப்பன் சொன்ன மேஜர் குட்நியூஸ்
சென்னை: கூட்டுறவுத்துறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வரும் நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கூட்டுறவுத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட சுருக்கெழுத்து தட்டச்சர்கள் (நிலை-3) மற்றும் தட்டச்சு பணியிடங்களுக்காகப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு 32 பேருக்கு பணி நியமன ஆணையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டுத் தேர்வான 32 நபர்களுக்குப் பணி நியமன ஆணை இப்போது வழங்கப்பட்டடுள்ளது.தமிழ்நாடு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என நம்முடைய முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே 38 மாவட்டங்களில் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் என 5,500 காலிப்பணியிடங்களை நிரப்ப 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள்.
நேர்முகத் தேர்வுக்கு பிறகு, தகுதியானவர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டது. 36 மாவட்டங்களில் இந்த தேர்வுப்பணிகள் சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் குறைகள் காரணமாக, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
கூட்டுறவு சங்க உதவியாளர்கள் தேர்வு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார். கூட்டுறவுத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்வற்கு என்றே தனிச்சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் ஒளிவு மறைவின்றி நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 70 லட்சம் பேர் பதிவு செய்திருந்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யாதவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் எவ்வித தடையும் இல்லை" இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications