ரூ.89,150 வரை மாதசம்பளம்.. டிகிரி, என்ஜினியரிங் படித்தவரா நீங்கள்? நபார்டு வங்கியில் சூப்பர் வேலை
சென்னை: நபார்டு வங்கியில் டிகிரி, என்ஜினியரிங் முடித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 முதல் ரூ.89,150 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பம் செய்ய இன்று கடைசி நாளாகும்.
விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கியின் சுருக்கம் தான் நபார்டு (National Bank For Agriculture And Rural Development - NABARD).

இந்த வங்கியில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
காலியிடம்: நபார்டு வங்கியில் 11 பிரிவுகளில் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பொதுப்பிரிவுக்கு 77 பேர், கம்ப்யூட்டர்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரவுக்கு 40 பேர், பைனான்ஸ் பிரிவுக்கு 15 பேர், கம்பெனி செக்ரட்டரி, சிவில் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவுக்கு தலா 3 பேர், ,ஜியோ இன்பரமேட்டிக்ஸ் பாரஸ்ட்ரி, புட் ப்ராசசிங்க், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் பிரிவுக்கு தலா 2 பேர், மாஸ் கம்யூனிகேசன்/மீடியா ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு ஒருவர் என மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: இந்த பணிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பை ஏதேனும் ஒரு பிரிவில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். என்ஜினியரிங் பிரிவு பணிக்கு பிஇ சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி பிரிவில் ஜியோ இன்பர்மெட்டிக்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாஸ் கம்யூனிகேசன்/மீடியோ ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு இளங்கலை பிரிவில் மாஸ் மீடியா, ஜர்னலிசம், மாஸ் கம்யூனிகேஷன், அட்வடைஸ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 21 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2028 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்பிடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு அளிக்கப்பட உள்ளது.
மாத ஊதியம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.44,500 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.89,150 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.800ம், எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் (இன்று ) ஆன்லைனில் www.nabard.org இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனிலில் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications