நபார்டு வங்கியில் வேலை.. மாதம் 89 ஆயிரம் வரை சம்பளம்! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசுக்கு சொந்தமான நபார்டு வங்கியில் (NABARD BANK) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 91 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.89 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசுக்கு சொந்தமான வங்கி நபார்டு (NABARD). தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டு நாடு முழுவதும் உள்ளது. ஊரக பகுதிகளில் விவசாய மேம்பாட்டுக்கு கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை நபார்டு வங்கி மேற்கொண்டு வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இந்த வங்கி செயல்படுகிறது. நபார்டு வங்கியில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன என்பதைக் காணலாம்.
உதவி மேலாளர் (Grade A) நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
பொது - 48, CA - 04, கம்பெனி செக்ரட்டரி - 02, நிதி - 05, கம்ப்யூட்டர் டெக்னாலஜி - 10, எகனாமிஸ்ட் - 02, லீகல் - 02 என மொத்தம் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
* மேற்கூறிய பணியிடங்களுக்கு கல்வி தகுதி பணியின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
* பொது (உதவி மேலாளர்) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
* MBA / PGDM / முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 55% மதிப்பெண்கள் போதுமானது.
* சிவில் இன்ஜினியரிங் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* எகனாமிஸ்ட் பணிக்கு பொருளியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 44,500 முதல் ரூ. 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரூ.800 கட்டணமாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் ரூ.150 கட்டணம்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.11.2025 ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications