நோ எக்ஸாம்.. ரூ.20,000 டூ ரூ.2 லட்சம் வரை ஊதியம்.. தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தில் சூப்பர் வேலை!
டெல்லி: தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் (National Handloom Development Corporation Limiter or NHDC) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பெற முடியும்.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேசிய கைத்தறி மேம்பாட்டு கழகத்தில் ஜூனியர் ஆபிசர் பணிக்கு மொத்தம் 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருப்போடு நிமிடத்துக்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தை டைப் செய்யும் வகையில் திறமை கொண்டிருக்க வேண்டும். அதோடு கம்ப்யூட்டர் பயன்படுத்தவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஹிந்தி டைப்ரைட்டிங் தெரிந்திருந்தாலும் கூடுதல் சிறப்பு. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் சீனியர் மேனேஜர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பணிக்கு சார்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 45 வயதுக்குள் இருப்பவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் கம்பெனி செயலாளர் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இவர் சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 8 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.60 லட்சம் வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nhdc.org.in இணையதளம் சென்று ஆன்லைனில் மே மாதம் 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், டைப்ரைட்டிங் திறமை மற்றும் குழு கலந்துரையாடல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications