ஏக்கருக்கு ரூ.25 லட்சம்.. நிலம் எடுப்பு சர்ச்சை குறித்து என்எல்சி இந்தியா முக்கியமான அறிவிப்பு
அடுத்தடுத்து சர்ச்கைகள் எழுந்து வரும் நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
நெய்வேலி: தனியாருக்கு விற்கப்பட உள்ளதாக தகவல் பரவியதால் என்எல்சிக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. அத்துடன் என்எல்சி கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தேசத்தின் வளர்ச்சியில் பல்வேறு வகைகளில், சிறப்பாக பங்களித்து வரும் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் தான் என்எல்சி இந்தியா நிறுவனம், சமீப காலமாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில், இந்நிறுவனம் தொடர்பாக வெளியிடப்பட்டு வரும் செய்திகளின் உண்மைத்தன்பை குறித்து அனைவரும் தெளியாக அறிந்து கொள்ளும். கீழ்க்கண்ட விரிவான விளங்கங்களை, இந்நிறுவனம் பிரசுரிக்கிறது.
என்எல்சி இந்தியா நிறுனம். ஒரு நவரத்னா மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 66 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து, மாநில வளர்ச்சிக்கும் சிறப்பாக பங்காற்றி வருகிறது. நாட்டிண் விவசாய உற்பத்திக்கும், பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கும் மின்சாரம் இன்றியமையாததாகிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் படித்து வருகின்ற இளைய தமுறையினருக்கு தொழிற்சாலைகள் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்கிட, மின்சாரம் அத்தியாசியமாகிறது.

கடலூர் மாவட்டம்
நெய்வேலி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலளர்கள் உட்பட கமார் 25 ஆயிரம் நபர்கள் புரிந்து வருகின்றனர். இதில் 10 சதவியித்திற்கும் அதிகமானோர் கடலூர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தை சார்ந்தவர் ஆவார்கள். மேலும் சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினர்கள் என்எல்சி நிறுவனத்தால் மறைமுகமாக பயனடைந்து வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் சிறக்க முறையில் கல்வி பயில, சிறந்த கல்வி நிலையங்கள் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சிறப்புடன் வாழ்வதற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் நெய்வேலி நகரியத்தில் உருவாக்கப்பட்டு மகிழ்ச்சியுடன் வசித்து வருகின்றனர். என்எல்சி இந்தியா நிறுவனம், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் சுமார் 62% (3135 MV - புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட) தமிழகத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் மின்னரம் வழுங்கி மாநில வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும் என்எல்சி இந்திய நிறுவனம் மூலம் நேரடியாக 25,000 நபர்களுக்கும் பிற தொழில்கள் மூலம் மறைமுகமாக சுமார் 50,000. நபர்களும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

நிலத்தடி நீர் மட்டம்
என்எல்சி இந்தியா நிறுவனம். பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்கு ஏற்றவாறு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை & பருவநிலை மாற்றம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண்டிற்கு 149.7 (மில்லியன் கனமீட்டர் அளவை விடக் குறைாாக, 71.8 மில்லியன் கனமீட்டர் நீரை மட்டுமே வெளியேற்றி வருகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் நீரானது செங்கால் ஜாட, பரவனாறு போன்ற வாய்க்கால்களின் வழியே மூப்பனேரி, வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆண்டு முழுவதும் இருப்பு வைக்கப்படுகிறது. பின்பு அந்த நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நெய்வேலியினை சுற்றியுள்ள 40 கிராமங்களில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் விளை நிலங்களில் ஆண்டுக்கு குறைக்கபட்சம் இரண்டு போகம் பயிர் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்படுவதுடன் விவசாயிகளின் பொருளாதர நிலையும் உயர்ந்துள்ளது.

நிலக்கரி எடுக்க நிலங்கள்
மின்சாரம் உற்பத்தி செய்யத் தேவையான பழுப்பு நிலக்கரி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. சுரங்கத் திட்டமிடல் துறையின் வழிகாட்டுதலின்படி, தேவையான நிலங்கள் பல்வேறு கட்டங்களாகக் கையகப்படுத்தப்படுகிறது. கடந்த 10 வருட காலங்களில் குறைந்த நிலம் கையகப்படுத்தப்பட்டதால். தற்போது என்எல்சி இந்தியா நிறுவனத்திடம் நிலக்கரி வெட்டுவதற்குத் தேளவான ஆர்ஜிதப்படுத்திய நிலங்கள் கையிருப்பில் இல்லை. இதனால் பழுப்பு நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்வெட்டு ஏற்பட்டு தொழில்கள் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் மற்றும் வேலை யாய்ப்பு இழப்புகள் ஏற்படக்கூடும். இதை,வளர்ச்சியை நோக்கி இருக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்எல்சி இந்தியா நிறுவனம். 1956ம் ஆண்டு முதல் சுரங்கப் பணிக்காக இதுவரை சுமார் 9700 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இதில் 9146 ஹெக்டேர் நிலங்களை நிலக்கரி வெட்டி எடுக்கவும், இதர பயன் சார்ந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை 2243 ஹெக்டேர் நிலங்கள் பண் நிரப்பி சமன் செய்யப்பட்டு உயிரியல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. மின்னாம் தொடர்ந்து உற்பத்தி செய்ய, மாநில வளர்ச்சிக்குப் பங்காற்ற, அடுந்த 5 வருடத்திற்கு தேவையான 1054 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. என்எல்சி இந்தியா நிறுவனம் அரசின் அனுமதி பெற்று, தொழில்நுட்பத் தேவை அடிப்படையில், உபரி நீரை மட்டுமே வெளியேற்றி வருகிறது. மாதந்தோறும் நீரில் உள்ள உப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டு, மாசு கட்டுப்பட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக நெய்வேலியிலிருந்து கடற்கரை வரையுள்ள பகுதிகளில் சுமார் 163 ஆழ்துளை கிணறுகள் ஆய்வுக்காக நிறுவப்பட்டு மாக கட்டுப்பாட்டு வாரியத்தினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக என்எல்சி சுரங்க இயக்கத்தால் கடல் நீர் உட்புகவில்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. மேலும் என்எல்சி சுரங்கங்களைச் சுற்றி, காற்று மாசு அளவிட கருவிகள் நிறுவப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் அளவை விட குறைந்த அளவே இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நிரந்தர வேலை
சுரங்கம் ஆரம்பித்த காலத்தில் நகுதியான, விருப்பப்பட்ட, அனைவருக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிந்தர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்பு 1977ம் ஆண்டு முதன் 1988ம் ஆண்டு வான நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களில் தகுதியான நபர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் படி 1827 நபர்களுக்கு நிரந்தா வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சுமார் 15,000 நபர்களுக்கு ஒப்பந்தம் பற்றும் இன்கோசர்வ் பணிகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 சதவீதத்திற்கு மேல் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

காற்று மாசு
உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயுவிலிருந்து சாம்பல் துகள்கள் 99% ESP என்ற மின்னியல் முறையில் படியவைத்து பிரித்தெடுப்பதன் மூலம் காற்று மாசுபடுவது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி FGD என்னும் உயர் தொழிநுட்பம் மூலம் வெளியேற்றப்படும் வாயுக்களில் உள்ள கந்தகத்தை வடிகட்டி வெளியேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய மின்னியல் ஆணையம் (CEA} மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (MoEF & CC) ஆய்வின்படி நெய்யேலி பகுதி குறைந்த மாசு உள்ள பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெய்வேலி சுரங்கங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீரை சுத்தப்படுத்தி 6 பேரூராட்சிகள் மற்றும் 625 ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் TWAD மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 7.92 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். நெய்வேலியில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திறந்த வெளி சுரங்கங்கள் வாயிலாக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது, பழுப்பு நிலக்கரி வெட்டி எடுத்த பகுதிகளில் மண் நிரப்பபட்டு சமன் செய்யப்பட்டு , காடுகள் வளர்க்கவும், விவசாயத்திற்கு உகந்த நிலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் சுமார் 2245 ஹெக்டேர்ஸ் பரப்பளவில் காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நெய்வேலி நகரியம் மற்றும் மீட்கப்பட்ட சுரங்கப் பகுதிகளில் சுமார் 187 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வனமாக மாற்றப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

ஏக்கருக்கு இழப்பீடு
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் உயர்த்தப்பட்ட இழப்பீடாக, விவசாய நிலங்களுக்கு குறைந்தபட்சமாக, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25லட்சம் வழங்கப்படுகிறது. நாட்டில் இந்த அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொது துறை நிறுவனம் என்எல்சி மட்டுமே ஆகும். முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீடு இழக்கும் உரிமையாளர்களுக்கு மொத்த இழப்பீடாக சுமார் 75 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நில எடுப்பால் பாதிக்கப்படும் நபர்கக்கு என்எல்சியில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நிரந்தர பணித் தேர்வுக்கான எழுத்து தேர்வில் குரூப் சி மற்றும் டி பணித் தேர்வுகளில் 20 ஊக்க மதிப்பெண்கள் நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது, அதன்மூலம் நிலஎடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்கள், பெரும்பாலானோர் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்பாதவர்களுக்கு ஒருமுறை பணப்பயன் அல்லது மாதத்திர உதவித் தொகை 20 ஆண்டுகளுக்கு இந்த தொகையானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. நில எடுப்பால் வீடு இழந்தவர்களுக்கு வீட்டிற்கான இரண்டு மடங்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல் மாற்று குடியிருப்பு மையத்தில் வீடு கட்டித் தரப்படும். அதை விரும்பாதவர்களுக்கு வீடு மற்றும் நிலத்தின் மதிப்பீடு வழங்கப்படும். மேற்கண்ட பலன்கள் அனைத்தும் rfctlarr 2013 சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நலனை விட மிகவும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ்
வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்பாதி, மும்முடி சோழகன், ஊ ஆதனூர் மற்றும் கத்தாழை கிராம பகுதியிலுள்ள 594 நில உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீடான ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் சுமார் 420 ஏக்கர் நிலங்களை கடந்த இரண்டு மாதங்களில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வழங்க எழுத்து பூர்வமான இசைவு அளித்துள்ளனர். நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள பயன்பெறும் வகையில் tnpsc, upsc, ssc ஆகிய தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் என்எல்சி இந்தியா நிறுவனத்தால் நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் படிப்பு படித்த மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள்
என்எல்சி இந்தியா நிறுவனம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. சுரங்கங்களைச் சுற்றியுள்ள வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைக்காலங்களில் வெள்ளநீர் துரிதமாக வடிய வகை செய்யப்பட்டுள்ளது. சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அருகில் உள்ள கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நோயளிகளுக்கான அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஐந்து வருடங்களில் சாலை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஆழ்துளை கிணறுகள், மருத்துவமனை கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள் ஆகியவை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ரூ.200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இத்தகைய செயல்களில் செலவினத்தை மேலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவால் நடத்தப்படும் பள்ளி கல்லூரிகளில் பயின்ற அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று இந்தியா மற்றும் மற்ற நாடுகளிலுள்ள பல்வேறு உயர் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர் தரம் வாய்ந்த கல்வி பெற்று சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்களாக பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அரசு வேலைகளிலும் குறிப்பாக ஐஏஏஸ், ஐபிஎஸ் பதவிகளில் சிறப்பாக பணிபுரிகின்றனர். நெற்வேலியைச் சுற்றியுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் என்எல்சி இந்தியா நிறுவனத்தால் பல்வேறு வழிகளில் பயன்பெற்று வருகின்றனர்.

மின்சாரம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது விவசாயத்திற்கான மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி, மத்திய அரசின் நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனமாக வளர்ச்சி பெற்று, சுற்றுப்புறச்சூழல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு விருதுகளையும் பெற்று, கடலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. நில உரிமையாளர்களின் சட்டப்படியான, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி , நில உரிமையாளர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் என்எல்சி இந்தியா நிறுவனம் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து தேவையான உதவிகளை சிறப்பான முறையில் நிறைவேற்றி கொடுக்கும் என்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் உறுதியளிக்கிறது" இவ்வாறு என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications