டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு! 2327 காலிப்பணியிடங்கள்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 , குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

அதில் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, குரூப் 1 சி ஆகிய தேர்வுகள் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
டிப்ளமோ, ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்:
"விண்ணப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 பதவிகள்:
*உதவி ஆய்வாளர்
*துணை வணிகவரி அலுவலர்
*இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்
*நன்னடத்தை அலுவலர்
*சார்பதிவாளர் நிலை II
*சிறப்பு உதவியாளர்
*தனி பிரிவு உதவியாளர்
*உதவிப் பிரிவு அலுவலர்
*வனவர்
என மொத்தம் 507 குரூப் 2 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
குரூப் 2ஏ பதவிகள்:
*தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர்
*முழு நேர விடுதிக்காப்பாளர்
*முதுநிலை ஆய்வாளர்
*தணிக்கை ஆய்வாளர்
*உதவி ஆய்வாளர்
*கைத்தறி ஆய்வாளர்
*மேற்பார்வையாளர் அல்லது இளநிலை கண்காணிப்பாளர்
*உதவியாளர்
*வருவாய் உதவியாளர்
*செயல் அலுவலர் நிலை II
*இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் தணிக்கை ஆய்வாளர்
*நேர்முக எழுத கணக்கர்
*இளநிலை கணக்கர்
*விரிவாக்க அலுவலர்
*கீழ்நிலை செயலிடை எழுத்தர்
என மொத்தம் 1820 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications