மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் 55 ஆயிரம் சம்பளம்.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு
சென்னை: நாட்டின் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான என்.டி.பி.சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.55 ஆயிரம் வழங்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்.டி.பி.சி லிமிடெட் (NTPC Limited). கடந்த 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பொது துறை நிறுவனம், நாட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சியில் 250 Assistant Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசுப் பணிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள என்டிபிசி மையங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களுடன் B.E. அல்லது B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது ஒரு வருட கால பணி அனுபவம் அவசியம். இந்த அனுபவம் 40 மெகாவாட் அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களில் இயக்குதல் அல்லது பராமரித்தல் துறையில் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது 2026 மே 7 அன்று தேதிப்படி, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (NCL) பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் இளநிலை நிர்வாக அதிகாரிகளுக்கு மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை, இரண்டு கட்டங்களாக நடைபெறும். கணினி வழித் தேர்வு (Computer Based Test) மற்றும் அதைத் தொடர்ந்து நேர்காணல் (Interview).
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500 செலுத்த வேண்டும். இருப்பினும், பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கிய நாள் ஏப்ரல் 23 ஆம் தேதி. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 7 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://careers.ntpc.co.in/recruitment/pdf_viewer.php?token=MzdHTmwvRjJ4VzZOZXhVTnZCdWdBRjdrbStkRjRuUkR5UCt3Umk0aWFjKzZENnB1NFRpLzZ5MUUyTmxwMW5sOGloRmZwT2VreFg3blBhK2Z4bzFHYTNUbDNWVzV4SGliUkQ3ZjI2L1l4VTg9OjpxV2JTMDZTM1VDdHpmL2JRc1lEZURBPT0%3D
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications