‛மதிய உணவு + வாரம் 2 நாள் விடுமுறை’.. Phonepe-வின் சூப்பரான புது வேலைவாய்ப்பு! அசரடிக்கும் சலுகைகள்
சென்னை: இந்தியாவில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்துக்கான பல்வேறு செல்போன் செயலிகளில் போன்பே-வும் ஒன்று. இந்நிலையில் தான் போன்பே நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மதிய உணவு அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும். அதுமட்டுமின்றி வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை தரப்படும். இதுதவிர ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது நாம் அனைவரும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து வருகிறோம். இதற்காக பல செல்போன் செயலிகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் செயலியாக போன்பே உள்ளது.

போன்பே செல்போன் செயலியை இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 3.7 கோடி பேர் வணிகர்களாக உள்ளனர். இந்நிலையில் தான் இந்த போன்பே நிறுவனத்தில் தான் தற்போது பல சலுகைகளுடன் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
அதாவது போன்பே நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின்படி கஸ்டமர் எக்ஸ்பிரியன்ஸ் மற்றும் ஆபரேஷன் பிரிவில் ஏபிடி அட்வைசர் (Customer Experience & Operations ABT Advisor) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு டிகிரி முடித்து ஆங்கிலம், இந்தியில் பேச தெரிந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் கூடுதலாக தென்னிந்திய மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அது பிளஸ் பாயிண்டாகும். வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து பிரச்சனையை தீர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த பணிக்கு 0 முதல் 2 ஆண்டு வரை Customer Facing Role-ல் பணியாற்றியவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் அனுபவம் இல்லாதவர்கள் கூட டிகிரி முடித்து நல்ல கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மதிய உணவு அலுவலகம் சார்பில் வழங்கப்படும். மேலும் வாரம் 5 நாள் பணி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது Rotational week off முறையில் 2 நாட்கள் விடுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூர் பெல்லந்தூரில் அமைந்துள்ள போன்பே அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். இது ஒரு முழுநேர பணியாகும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றிய தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இதுதவிர இன்சூரன்ஸ், கிராசூட்டி, பிஃஎப், உயர் கல்வி பயில்வதற்கான உதவி, கார் வாடகை, சம்பளத்தை முன்கூட்டியே வாங்கி கொள்வது, பிரசவ கால விடுமுறை, குழந்தைகளுக்கான டே-கேர் சப்போர்ட், விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு, உள்பட பல வசதிகள் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும். இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்துக்கான கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications