பொதுத்துறை வங்கியில் வேலை! விண்ணப்பிக்க மறந்தவர்களுக்கு மீண்டும் சான்ஸ்! தமிழ் தெரிந்தால் முன்னுரிமை
சென்னை: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்கல் பேங்க் ஆஃபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு இந்தியா மட்டும் இன்றி லண்டன், ஹாங்காங், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் கிளைகள் உள்ளன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் லோக்கல் பேங்க் ஆஃபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்;
பொதுப்பிரிவு: 336
ஒபிசி 194
EWS: 67
எஸ்சி: 104
எஸ்டி : 49
என மொத்தம் 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில வாரியாக பார்த்தால் 17 மாநிலங்களில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (135), குஜராத் (95), தெலுங்கானா (88), அசாம் (86), கர்நாடகா (85) மற்றும் தமிழ்நாடு (85) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழித்திறன் அவசியம். தமிழகத்தில் உள்ள பணியிடங்கள் என்றால் தமிழ் தெரிந்து இருக்க வேண்டும். 10 வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்தவர்களுக்கு மொழித்திறன் தேர்வு வைக்கப்படாது. இல்லையென்றால் தனியாக மொழித்திறன் தேர்வு எழுத வேண்டியது அவசியம்.
வயது வரம்பு:
ஜூலை 1 ஆம் தேதிப்படி 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
நான்கு கட்ட தேர்வு முறைகள் பின்பற்றப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும். இதில், ரீசனிங், பொது அறிவு, கம்ப்யூட்டர் அப்ட்டியூட் உள்ளிட்ட கேள்விகள் இடம் பெறும். 150 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். பிரிவு வாரியாக நேரம் ஒதுக்கப்படும். நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.
50 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். எஸ்சி /எஸ்டி பிரிவினர் 22.5 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உள்ளூர்மொழித்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இறுதி கட்ட மெரிட் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 1 ஆம் தேதி கடைசி நாள். ஆன்லைன் தேர்வு டிசம்பர்/ ஜனவரியில் நடைபெரும்.. விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும்.
எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.59 ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளவும்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications