"தபால் துறையில் வேலை".. தேர்வு கிடையாது + 10ம் வகுப்பு போதும்..சென்னையில் ஜுலை 30ல் இன்டர்வியூ..
சென்னை: தபால் துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். எழுத்து தேர்வு இன்றி நிரப்படும் இந்த பணிக்கான நேர்க்காணல் என்பது ஜுலை 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்று பணியை பெறலாம்.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் தபால் துறை இயங்கி வருகிறது. தபால் துறை சார்பில் தற்போது பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் அஞ்சலக ஆயுள் காப்பீடு (Postal Life Insurance) திட்டமாகும்.

இந்நிலையில் தான் அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான ஏஜென்ட் (Agents to sale of postal life insurance) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோரின் குறைந்தபட்ச வயது என்பது 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது என்பது 50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுத.
இந்த பணிக்கு ஆண், பெண் என இருதரப்பினரும் விண்ணப்பம் செய்யலாம். வேலையில்லாத இளைஞர்கள், படித்த இளைஞர்கள், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள், முன்னாள் படை வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், மகளிர் மண்டல பணியாளர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற .றுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் நேர்க்காணலில் பங்கேற்கலாம். ஆனால் முக்கியமான ஒன்று உள்ளது. அது என்னவென்றால் நேர்க்காணலுக்கு செல்வோர் பிற காப்பீட்டு நிறுவனங்களின் ஏஜென்ட்டாக இருக்க கூடாது.
இந்த பணியை பெற விரும்புவோர் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் என்பது ஜுலை 30ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தாம்பரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. அதாவது Office of Senior Superintendent of Post offices, Tambaram Division, Chennai 600 045 என்ற முகவரியில் உள்ள சென்னை தாம்பரம் தலைமை தபால் நிலையத்தின் முதல் தளத்தில் நேர்க்காணல் என்பது நடைபெற உள்ளது.
இந்த பணி என்பது அரசு வேலையல்ல. முழுவதும் கமிஷன் அடிப்படையிலான பணியாகும். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பார்ன், ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் ஜுலை 30ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தேசிய சேமிப்ப சான்று/ஜனாதிபதி பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திர வடிவில் ரூ.5000 காப்பீட்டு தொகையாகவும், தற்காலிக உரிம கட்டணமாக ரூ.50ம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பணிக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications