பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை.. மாதம் 1 லட்சம் வரை சம்பளம்! 70 பணியிடங்கள் இருக்கு.. விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கான சூப்பர் சாய்ஸ் ஆக பவர் கிரிட் நிறுவனத்தில் 70 டிரெய்னி சூப்பர்வைசர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வில் செலக்ட் ஆகுபவர்களுக்கு மாதம் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள 70 டிரெய்னி சூப்பர்வைசர் (எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: டிரெய்னி சூப்பர்வைசர் (எலக்ட்ரிக்கல்) - 70 பணியிடங்கள். கல்வி தகுதியை பொறுத்தவரை மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்ச்ம் 70 சதவிகித மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எஸ்.சி /எஸ்.டி பிரிவினர் பாஸ் மார்க் எடுத்தால் போதும்.
டிப்ளமோ படிப்பில், எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் (பவர்) / எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ பவர் சிஸ்டம்ஸ் என்ஜினியரிங்/ பவர் என்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். பி.டெக்/ பி.இ / எம்.டெக் / எம்.இ ஆகிய உயர் படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 6.11.2024 தேதிப்படி 27 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி/எஸ்.டி பிரிவினராக இருந்தால் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினராக இருந்தால் 30 வயது வரையும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளியாக இருந்தால் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: சம்பளத்தை பொறுத்தவரை ரூ.24,000-3%-1,08,000/ வரை வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.. எழுத்து தேர்வு / கணினி வழி தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு தமிழகத்தில் சென்னையில் நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கும் போதே கட்டணம் செலுத்த வேண்டும். https://www.powergrid.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 6.11.2024 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.powergrid.in/sites/default/files/inline-files/Trainee-Sup-Detail-Advt-CC-09-2024-dtd-16102024.pdf செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications