Bank Job: பஞ்சாப் & சிந்த் வங்கியில் மேனேஜர் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: பஞ்சாப் & சிந்த் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி + அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி போன்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் & சிந்த் வங்கி. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 1,800 கிளைகளுடனும் 25 மண்டல அலுவலகங்களுடன் இயங்கி வரும் மிகப்பெரிய வங்கியாக பஞ்சாப் சிந்த் வங்கி உள்ளது.

பணியிடங்கள் விவரம்:
* தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 30 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* MSME ரிலேஷன்ஷிப் மேனேஜர்: 30 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
* இந்த பணியிடங்களுக்கு அங்கீகரிக்கபப்ட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ (மார்க்கெட்டிங் அல்லது நிதி) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* கஸ்டமர் ரிலேஷன்ஷிப் / கிரெடிட் மேனேஜ்மெண்ட் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். ரிசர்வ் வங்கியால் அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
* வயது வரம்பை பொறுத்தவரை 01.11.2025 தேதிப்படி குறைந்தபட்சம் 25 வயதும் அதிகபட்சம் 33 வயதுக்கும் இடையில் வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.11.1992 க்கு பிறகோ, 01.11.2000- க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
* அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
* எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
* தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். https://punjabandsind.bank.in/ -என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்; 05.11.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 26.11.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications