நோ எக்ஸாம்.. டிகிரி படித்தாலே போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வாய்ப்பு.. நாளை கடைசிநாள்!
மும்பை: மும்பையில் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உரம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து பணியை தட்டித்தூக்கலாம். இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைய உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உரம் லிமிடெட் (Rashtriya Chemicals & Fertilizers Limited or RCF) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி தற்போது கிராசூவேட் அப்ரெண்டீஸ் பணிக்கு 70 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் வயது தளர்வு உண்டு. வயது வரம்பானது 2023 மார்ச் 1ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 8 ம் தேதிக்குள் (நாளை) rcfltd.com இணைதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் மெரிட் மார்க், சான்று சரிபார்ப்பு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது அப்ரெண்டீஸ் வகை பணி என்பதால் வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் 12 மாதம் வரை வேலையில் நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications