செம வாய்ப்பு! கைநிறைய சம்பளம்! என்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்? அரசு வேலை ரெடி-அழைக்கும் ஆர்சிஎப்எல்
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்சிஎப்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னிஸ் என்ற பிரிவில் காலியாக இருக்கும் ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம் துறையின் கட்டுப்பாட்டில் ஆர்சிஎப்எல் எனும் ராஷ்ட்ரிய கெமிக்கல் மற்றும் உர லிமிடெட் நிறுவனம் (RCFL or Rashtriya Chemicals and Fertilizers Limited)செயல்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் உரம் மற்றும் ரசாயனம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஆர்சிஎப்எல் நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெய்னி பொறுப்பில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 124 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மார்க்கெட்டிங் பிரிவுக்கு 37 பேர், கெமிக்கல் பிரிவுக்கு 28 பேர், இன்ஸ்ட்ரூமென்டேசன் பிரிவுக்கு 12 பேர், எலக்ட்ரிக்கல், பாய்லர் பிரிவுக்கு தலா 10 பேர், சிசி லேப் பிரிவுக்கு 7 பேர், மெக்கானிக்கல் பிரிவுக்கு 6 பேர், எச்ஆர் டெவலப்மென்ட், ஐடி பிரிவுக்கு தலா 3 பேர், பாதுகாப்பு (Safety) பிரிவுக்கு 4 பேர், எச்ஆர் பிரிவுக்கு 2 பேர், அட்மினிஸ்ட்ரேசன், சிவில் பிரிவுக்கு தலா ஒருவர் என மொத்தம் 124 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 30 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோரின் வயது வரம்பு என்பது 01.05.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
கல்வி தகுதி: இந்த பணிக்கு பிஇ, பிடெக் படிப்பில் ஐடி,, கம்ப்யூட்டர் என்ஜினியரிங், கெமிக்கல் என்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், பெட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் எச்ஆர் பிரிவு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Personnel, Social Work, Welfare, industrial Relations, Labour Studies மற்றும் எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளில் டிகிரி, பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தப்பட்சம் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். மார்க்கெட்டிங் பிரிவுக்கு அலோவன்ஸ் தொகையும் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் பேஸ்ட் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications