டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.40,000 சம்பளத்தில் விமான ஆணையத்தில் பணி! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முறையான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Airports Authority Of India (AAI) என்பதை தமிழில் இந்திய விமான ஆணையம் என அழைக்கிறோம். இங்குள்ள காலி பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது காலியாக உள்ள Junior Executive பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

400 பணியிடங்கள்

400 பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Junior Executive எனும் பிரிவில் காலியாக பணியிடங்கள் உள்ளன. தற்போது மொத்தம் 400 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பிஇ, பிடெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேலாக முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

வயது எவ்வளவு?

வயது எவ்வளவு?

விண்ணப்பத்தாரர்களின் வயது 14.07.2022ம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், ஓபிசி (நான் கிரிமி லேயர்) பிரிவினருக்கு 3 வயதும், பிடபிள்யூக்கு 10 வயதும் சலுகை உண்டு.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

இதற்கான விண்ணப்பத்தை www.aai.aero எனும் இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து ஆன்லைனில் ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை ஒரு மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பம் கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.40 லட்சமும் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு...

மேலும் விபரங்களுக்கு...

கூடுதல் விபரங்களை https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட https://www.aai.aero/en/recruitment/release/268290 கிளிக் செய்து அறிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+