மாத சம்பளம் ரூ.47,000.. தமிழகத்தில் நல்ல பணி.. ரெப்கோ வங்கிக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழுவிபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, புதுச்சேரி உள்பட தென்மாநிலங்களில் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.47 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரெப்கோ வங்கியில் ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடுள்து.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

ரெப்கோ வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட்/கிளார்க் என்ற பிரிவில் மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பபட உள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 2 இடங்களில் 40 இடங்கள், ஆந்திரா, கர்நாடகாவில் தலா 4, கேரளாவில் 2 இடங்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். அதோடு தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட ஏதேனும் ஒரு மொழியில் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பணிக்கான அதிகபட்ச வயதாக 28 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பத்தாரர்கள் 01.10.1994க்கு முன்பும், 20.09.2001 பின்பும் பிறந்திருக்க கூடாது. வயது வரம்பானது 30.09.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10, 15, 13 என்ற வகையில் வயது தளர்வுகள் உண்டு. கணவரை இழந்த பெண்களுக்கு 7 வயது வரை வயது வரம்பானது விலக்கி கொள்ளப்படும்.

 சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு?

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை கிடைக்கும். பிற அலாவன்ஸ்களும் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வானது சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும். விண்ணப்பம் செய்த பிறகு தேர்வு தேதி என்பது அறிவிப்பு செய்யப்படும்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் நவம்பர் 25ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.900 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் www.repcobank.com இணையதளம் சென்று Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வேலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல Click Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+