இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு 'கிரீன் கார்டு' தொடர்பாகப் பல விதிகள் மாற்றப்பட்டு இருந்தது. குறிப்பாகக் கடந்த வாரம் பரிசீலனையில் இருக்கும் காலகட்டத்தில் விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்பது போன்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே இதில் இப்போது அறுதல் செய்தி வெளியாகி, அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு கடந்த 1.5 ஆண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டது. குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்தித்து வருகிறார்கள். சாதாரண விசா தொடங்கி கிரீன் கார்டு வரை பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

திடீர் அறிவிப்பு
இதற்கிடையே கடந்த வாரம் அமெரிக்கக் குடியுரிமை அமைப்பு வெளியிட்ட ஒரு திடீர் அறிவிப்பு, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது அந்த அறிவிப்பில், "விதிவிலக்கான காரணங்கள் இருந்தால் தவிர, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொதுவாகத் தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் சென்று, அங்கிருந்தே காத்திருக்க வேண்டும்" என்பது போலக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தங்களின் வேலை மற்றும் குடும்பத்தை இழந்து தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் உறைந்து போயினர்.
அதிகாரப்பூர்வ விளக்கம்
இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது அமெரிக்கக் குடியேற்றக் கொள்கைகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு விண்ணப்பதாரர் அமெரிக்காவிற்கு வெளியிலிருந்தே கிரீன் கார்டு செயல்முறையை முடிக்க வேண்டுமா இல்லையா என்பதை, அந்தந்தக் குடியேற்ற அதிகாரிகளே தங்களின் தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கேஸ் பை கேஸ் அடிப்படையில் தீர்மானித்து வருகின்றனர். அந்த நிலையே தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சாதாரண அறிவிப்பு
தற்போது வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் என்பது, அதிகாரிகளுக்கு ஏற்கனவே இருக்கும் அந்தப் பழைய அதிகாரத்தை நினைவூட்டும் ஒரு சாதாரண நிர்வாக நடைமுறைதானே தவிர, அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்று இல்லை என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி மற்றும் DHS செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
விளக்கம்
பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்களின் கிரீன் கார்டு வரும் வரை அமெரிக்காவிலேயே தங்கி இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு உறுதியளித்தாலும், சிலருக்கு மட்டும் இதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஏற்கனவே விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் அல்லது இதர குடியேற்ற விதிமீறல் உள்ள நபர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். இதுபோன்ற நபர்கள் விஷயத்தில், அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்ப உத்தரவிடலாம்.
இருப்பினும், இந்த விதிமுறைகள் யாரை எல்லாம் பாதிக்கும் என்பது குறித்த துல்லியமான விளக்கமான வழிகாட்டுதல்களை அரசு இன்னும் வெளியிடவில்லை. இதனால் குடியேற்ற ஆலோசகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் சில கேள்விகள் இன்னும் நீடித்தே வருகின்றன. இவை அனைத்திற்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை உரிய விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications