டிகிரி போதும்.. 450 உதவியாளர் பணி! மாதசம்பளம் ரூ.47,849.. ரிசர்வ் வங்கியில் சென்னையிலேயே வேலை
சென்னை: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் காலியாக உள்ள 450 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் மாதசம்பளம் ரூ.47,849ல் பணியை பெற முடியும்.
ரிசர்வ் வங்கி என அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கிகளுக்கு தேவையான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:
காலியிடங்கள்: சென்னை உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சென்னையில் 13, பெங்களூரில் 58, ஹைதராபாத்தில் 14, திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் 14 என இந்தியா முழுவதும் மொத்தம் 450 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது டிகிரி படிப்பை 50 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் டிகிரி படிப்பை முடித்திருந்தாலே போதும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு னெ்பது 01.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 14.10.2023ம் தேதிக்குள் www.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.450 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்வோர் Preliminary Exam, Main Exam முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications