ரூ.77,000 வரை மாதசம்பளம்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு! அழைக்கும் ஆர்எப்சிஎல்
ஹைதராபாத்: ஆர்எப்சிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.77 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கப்பட உள்ளது.
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் ஆர்எப்சிஎல் எனும் ராமகுண்டம் உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் (Ramagundam Fertilizers and Chemicals Limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது நேஷனல் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (NFL), இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) மற்றும் ஃபெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (FCIL) ஆகியற்றின் உதவியுடன் இயங்கி வரும் கூட்டு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் தினமும் 2,200 மெட்ரிக் டன் அளவுக்கு அமோனியா மற்றும் 3,850 மெட்ரிக் டன் அளவிலான நீம் கோட்டட் யூரியா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஜுனியர் என்ஜினீரிங் அசிஸ்டென்ட் (ப்ரோடக்சன்) பணிக்கு 11 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரோடக்சன்) பணிக்கு 6 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பணிக்கு 3 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு ஒருவர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பணிக்கு 4 பேர், என்ஜினீயரிங் அசிஸ்டெட்ன்ட (இன்ட்ஸ்ரூமென்டேஷன்) பணிக்கு 2 பேர், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (கெமிக்கல்) பணிக்கு 2 பேர், அலுவலக உதவியாளர் பணிக்கு 6 பேர் என மொத்தம் 35 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ஜுனியர் என்ஜினீரிங் அசிஸ்டென்ட் (ப்ரோடக்சன்), என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (ப்ரோடக்சன்) பணிக்கு டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங்/டெக்னாலஜி, பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்) பணிக்கு டிப்ளமோ மெக்கானிக்கல்/டெக்னாலஜி, என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்) பணிக்கு டிப்ளமோ எல்க்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/டெக்னாலஜி படித்திருக்க வேண்டும்.
ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்), என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (இன்ட்ஸ்ரூமென்டேஷன்) பணிகளுக்கு டிப்ளமோவில் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அப்ளைட் இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் (கெமிக்கல்) பணிக்கு பிஎஸ்சி பிரிவியில் வேதியியல், அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.77 ஆயிரம் வரையும், ஜுனியர் என்ஜினீரிங் அசிஸ்டென்ட், அலுவலக உதவியாளர் பணிகளுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.56,500-ம் மாதசம்பளமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு 40 வயதுக்குள்ளும், ஜுனியர் என்ஜினீயரிங் அசிஸ்டென்ட் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் rfcl.co.in இணையதளம் மூலம் மார்ச் மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், துறை சார்ந்த பணியாளர்களுக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Test), நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications