RRB NTPC: இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் கிளர்க் வேலை.. 3058 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க மீண்டும் ஒரு சான்ஸ்!
சென்னை: இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், டைப்பிஸ்ட் உள்பட 3058 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பிக்காதவர்களுக்காக தற்போது மீண்டும் ஒரு சான்ஸ் கொடுத்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.
ஆர்.ஆர்.பி எனப்படும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்பு வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் ஆர்.ஆர்.பி என்.டி.பி.சியில் டிக்கெட் கிளர்க், டைப்பிஸ்ட் உள்பட மொத்தம் 3058 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

ரயில்வே அமைச்சகத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கானோரின் விருப்பமாக இருப்பதால் பலரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வந்தனர். மேலும் 12 ஆம் வகுப்பு தகுதி என்பதால் அதிகளவிலானோர் விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியிடங்கள் விவரம்:
* கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் - 2,424 பணியிடங்கள்
* அக்கவுண்ட்ஸ் கிளர்க் - 364 பணியிடங்கள்
* ஜூனியர் கிளர்க் - 163 பணியிடங்கள்
* ரயில் கிளர்க் - 77 பணியிடங்கள் என மொத்தம் 3,058 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
* அக்கவுண்ட்ஸ் கிளர்க், ஜூனியர் கிளர்க் ஆகிய பணியிடங்களுக்கு மட்டும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். ரயில் கிளர்க் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.
வயது வரம்பு:
18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (Gen/EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
* கமர்ஷியல் டிக்கெட் கிளர்க் பணி - ரூ.21,700 முதல் ரூ.69,100
* அக்கவுண்ட்ஸ் கிளர்க் - ரூ.19,900 முதல் ரூ.63,200
* ஜூனியர் கிளர்க் - ரூ.19,900 முதல் ரூ.63,200
* ரயில் கிளர்க் - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
* ஆர்.ஆர்.பி இணையதளம் வாயிலாக தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். சிபிடி எனப்படும் கணினி வழித் தேர்வாக இரண்டு கட்டத் தேர்வுகள் நடைபெறும்.
* டைப்பிங் திறன் தேர்வு (தேவைப்படும் பணியிடத்திற்கு மட்டும்) நடத்தப்படும். * இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
* விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
* எஸ்சி/எஸ்டி, பெண்கள், EBC பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாகும். தேர்வு எழுதிய பிறகு முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும்.
விண்ணப்பிக்க 27.11.2025 அன்று தான் கடைசி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 4 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://drive.google.com/file/d/15SF4za5YlAOGRFMs9nrGyPTkSHaC5NKL/view












Click it and Unblock the Notifications