ரயில்வேயில் வேலை வேணுமா? 32,438 பணியிடங்கள்.. விண்ணப்ப அவகாசம் தொடங்கிடுச்சு.. தூள் கிளப்புங்க
சென்னை: உதவியாளர், டிராக் மெயிண்டனர், மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட் என இந்தியன் ரயில்வேயில் ஆர்ஆர்பி குரூப் டி பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கியது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இங்கு பார்க்கலாம்.
அரசு வேலைக்காக இளைஞர்கள் பலரும் காத்திருந்து படித்து வருகின்றனர். இதிலும், ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதனால் ரயில்வேயில் இருந்து எப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும் காத்திருந்த நிலையில் கடந்த மாதம் ரயில்வேயின் ஆர் ஆர் பி குரூப் டி பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியானது.

ஆனால் எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலை ஆர் ஆர் பி வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி தான். டிராபிக் பாயிண்ட்ஸ்மேன், டிராக் மெயிண்டனர், மெக்கானிக்கல் அஸிஸ்டண்ட் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 35,438 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்:
டிராபிக் பாயிண்ட்ஸ்மேன் பி - 5,058
அஸிஸ்டண்ட் (P-Way) - 247
மெக்கானிக்கல் அஸிஸ்டன்ட் (C&W) - 2,587
என்ஜினியரிங் அஸிஸ்டண்ட் (டிராக் மிஷின்) - 799
டிராக் மெயிண்டனர் (குரூப் - 4)- 13,187
அஸிஸ்டன்ட் லோகோ (எலக்ட்ரிக்கல்) - 950
அஸிஸ்டன்ட் ஆபரேஷன்ஸ் (எலக்ட்ரிக்கல்) - 744
அஸிஸ்டண்ட் லோகோ (Diesel) - 420
அஸிஸ்டண்ட் ஒர்க்-ஷாப் மெக்கானிக்கல்) - 3077
எலக்ட்ரிக்கல் அஸிஸ்டண்ட் டிஆர்டி - 1381
உள்பட மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி & சம்பளம்: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூ.18,200 வழங்கப்படும். அலவன்ஸ்சுடன் சேர்த்து மாதம் ரூ. 22,500 முதல் ரூ.25,380 வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது உடையவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு வயது உச்ச வரம்பு சலுகையின் படி 18 முதல் 36 வயதுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: தேர்வானது ஆன்லைன் மூலமாக நடைபெறும். முதலில் கணினியில் கொள்குறி தேர்வு (சிபிடி), உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் வழியாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நேற்று முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள் பிப்ரவரி 22 ஆம் தேதி ஆகும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் 500 ஆகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு எழுதிய பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400 திருப்பி அளிக்கப்படும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். தேர்வு எழுதி பிறகு முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications