ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்.. ஆரம்பமே 35,000 சம்பளம்.. வேலை தேடும் இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்
டெல்லி: இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களில் காலியாக 7,951 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.35,000 சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரயில்வே துறையில் பணி செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. ரயில்வே துறையில் பணி செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் பல லட்சம் இளைஞர்களின் கனவாக உள்ளது. ரயில்வே வேலையில் சேருவதற்காக ஆண்டு கணக்கில் தேர்வுக்கு நாடு முழுவதும் இளைஞர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள்..

ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன. அந்த வகையில் தற்போது ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 7,951 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்பட இதர விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* கெமிக்கல் சூப்பர்வைசர்/ ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி - 13 பணியிடங்கள்.
* ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் - 7934 பணியிடங்கள் என மொத்தம் 7,951 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி:
ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்னப்பிக்கலாம். ஜூனியர் இன்ஜினியர் (ஐடி: பிஜிடிசிஏ/பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) , பிசிஏ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். டெபோ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்க்கு டிபளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் பணியிடத்திற்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் கொண்ட பட்டப்படிப்பை 45 மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் படித்து அறிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: இந்த பணியிடங்களுக்கு 18 - வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகை உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உண்டு. பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்ப ஊதியமாக ரூ.35,400/- வழங்கப்படும். இதர சலுகைகளும் உண்டு.
விண்ணப்ப கட்டணம்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதார்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.. விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 30.07.2024 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 29.08.2024 ஆகும்.
விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு எழுதிய பின்னர் ரூ. 400 ரிட்டன் செய்யப்படும். பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 250 விண்னப்பக் கட்டணம் ஆகும். ஆன்லைன் தேர்வு எழுதி முடித்ததும் ரூ.250 ரிட்டன் செய்யப்படும்.
தேர்வு முறை: ஆன்லைனில் (சிபிடி) தேர்வு நடைபெறும். தேர்வில் தேச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்படும் மற்றும் மெடிக்கல் தேர்வு நடைபெறும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு (https://www.rrbchennai.gov.in/) இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications
