ரயில்வேயில் வேலை.. 9 ஆயிரம் பணியிடங்கள்.. விரைவில் வெளியாகிறது அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ரயில்வேயில் காலியாக உள்ள 9000 டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இந்திய ரயில்வே. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனமாகவும் ரயில்வே உள்ளது. இந்திய ரயில்வேயில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்படுகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ரயில்வேயில் காலியாக உள்ள 9000 டெக்னிஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமான ஆர்.ஆர்.பி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்: டெக்னிஷியன் Gr 1 Signal பணியில் 1100 காலியிடங்களும், Technician Gr 3 பனியின் கீழ் 7900 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வி தகுதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அடுத்த மாதம் 9 ஆம் தேதி முதல் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் தொடங்க உள்ளது. எனவே அதற்குள் தேர்வு குறித்த தெளிவான அறிவிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு தேர்வு பற்றிய ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது.
வயது வரம்பு: ரயில்வே டெக்னிஷியன் Grade I signal பதவிக்கு 18 வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிஷியன் கிரேட் III பதவிக்கு 18 - வயது முதல் 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: கணிணி வழியே தேர்வு நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். பொது பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications