SBI Bank Jobs: எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு.. 6,589 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
சென்னை: நாட்டின் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு (SBI Bank Jobs) அறிவிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 6,589 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.64,480 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ ஆகும். எஸ்பிஐ வங்கியை தவிர்த்து இதர அனைத்து வங்கிகளுக்குமான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டது. மொத்தம் 6,589 கிளார்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

பணியிடங்கள் விவரம்:
கை நிறைய சம்பளம், சலுகைகள், சமூகத்தில் கவுரவமான அந்தஸ்து, பணி பாதுகாப்பு இருப்பதால் வங்கிப் பணிகளில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று படித்து வந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய சான்ஸாக இருந்தது. பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், இன்றே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
எஸ்பிஐ வங்கியில் நாடு முழுவதும் 6,589 கிளார்க் (ஜூனியர் அசோசியேட்) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கர்நாடகாவில் 270, கேரளாவில் 247 என நாடு முழுக்க மொத்தம் 5,180 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. ஏற்கனவே நிரப்பப் படாத backlog பணியிடங்களையும் சேர்த்து 6,589 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். நடப்பு ஆண்டில் பட்டப்படிப்பு முடிப்பவர்களும் (டிசம்பர் 31. 2025 -க்குள்) விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம் ஆகும்.
உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், தமிழ் மொழி தெரிந்து இருப்பது அவசியம். 10, 12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படிக்காத விண்ணப்பதாரர்கள், உள்ளூர் மொழித்திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 2.04.1997 முதல் 1.04.2005 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரை விண்ணப்பிக்க முடியும்.
இன்றே கடைசி நாள்
தேர்வு முறையை பொறுத்தவரை, முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் நிலை தேர்வானது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும். மெயின்ஸ் தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும். இது தொடர்பான விவரங்கள் பின்னர் தெரியப்படுத்தபடும்.
ஆன்லைன் வழியாகவே மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க: https://sbi.co.in/documents/77530/52947104/JA+2025+-Detailed+Advt.pdf/8f7ff18f-1972-21c8-9212-5a8cf85a7099?t=1754398573326
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications