வந்தது அறிவிப்பு! எஸ்பிஐ வங்கியில் கிளர்க் வேலை.. 8,283 பணியிடங்கள்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8,283 பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் ஆப் இந்தியா. எஸ்.பி.ஐ தவிர்த்து பிற வங்கிகளுக்கான பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் முலம் நிரப்பப்டுகிறது. ஆனால், ஸ்டேட் பாங் ஆப் இந்தியா எனப்படும் எஸ்.பி.ஐ தனியாக தேர்வு நடத்தி அவ்வப்போது காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அந்த வகையில், வங்கிப் பணிகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட் ( வாடிக்கையாளர் உதவி &சேல்ஸ்) கிளர்க் கேடர் பதவிகள் - 8,283 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும் 31.12.2023 க்கு முன்பாக பட்டப்படிப்பு முடித்தற்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு? தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 17,900 - 47,920 வரை சம்பளமாக கிடைக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆரவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்னப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டை பொறுத்தவரை முதன்மை தேர்வுகள் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி: முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மெயின் தேர்வு பிப்ரவரி மாதமும் நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு இன்று (17.11.2023) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 07.12.2023 ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521 இங்கே கிளிக் செய்யவும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications