எஸ்பிஐ வங்கியில் வேலை! தமிழகத்தில் 336 பணியிடங்கள்! தேதி முடிய போகுது! வேற லெவல் சான்ஸ்! விட்றாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 13,735 ஜூனியர் அசோசியேட் (கிளர்க்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 336 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிகிறது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.

நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியாக இருப்பது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் எஸ்பிஐ வங்கி. இந்த வங்கி இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ள எஸ்.பி.ஐயில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாகவே வேலை தேடும் தேர்வர்களுக்கு வங்கி வேலை மீது பெரும் ஆர்வம் உள்ளது..

job jobs bank job

இதனால், எஸ்பி ஐ வங்கி வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் ஆர்வத்துடன் எதிபார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் நாடு முழுவதிலும் 13,735 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 336 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைய உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளை சேர்த்து 13,735 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 336 காலிப்பணியிடங்கள் உள்ளன. கேரளாவில் 426 பணியிடங்களும் உள்ளன. தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம்.

கல்வி தகுதி & வயது வரம்பு: கிளர்க் பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். வயது வரம்பை எடுத்துக்கொண்டால் 20 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 28-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது ஏப்ரல் 1-2024 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 02 ஏப்ரல் 1996- க்கு முன்பாக பிறந்திருக்க கூடாது. ஏப்ரல் 1-2004 க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது.

அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதாவது எஸ்.சி/ எடி பிரிவினர் என்றால் 33 வயது வரையும் ஓபிசி பிரிவினர் என்றால் 31 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்வு வினாத்தாள் இடம் பெற்று இருக்கும். நாட்டில் உள்ள முக்கியமான நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. பிற பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ. 750- செலுத்த வேண்டும். (https://sbi.co.in/) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க அவகாசம் வரும் 07.01.2025 முடிவடைகிறது. இன்னும் 3 நாட்களே எஞ்சியிருப்பதால் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+