எழுத்து தேர்வு கிடையாது.. ஸ்டேட் வங்கியில் 1,194 காலியிடம்.. சென்னை சர்க்கிளிலும் பணி நியமனம்
சென்னை: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு இல்லை. அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சர்க்கிளிலும் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
நம் நாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ எனும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் ஒன்றும். இந்த வங்கியில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் இப்போது எழுத்து தேர்வு இன்றி 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது எந்த வகையான பணி யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தற்போதைய அறிவிப்பின்படி எஸ்பிஐ வங்கியில் Concurrent Auditor பிரிவில் 1,194 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இது ஓராண்டு Engagement பணியாகும். இந்த காலக்கட்டத்தில் பணியாளர்களுக்கு 30 நாட்கள் வரை விடுப்பு என்பது வழங்கப்படும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பல்வேறு கேட்டகிரியில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. MMGS III -ல் ஓய்வு பெற்றவர்கள் என்றால் மாதம் ரூ.45 ஆயிரம், SMGS -IV ல் ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.50,000, SMGS-V ஓய்வு என்றால் மாதம் ரூ.65,000, TEGS - VI ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.80,000 வரை சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மார்ச் மாதம் 15ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். பணியை விரும்புவோர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்யும்போது ஒவ்வொருவரும் தங்களின் அடையாள அட்டை, வயது ப்ரூப் உள்பட அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும். இதில் ஏதேனும் மிஸ்ஸாகும் பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ என்பது 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கும். எழுத்து தேர்வு கிடையாது. இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு பணி என்பது கிடைக்கும். ஒருவேளை இண்டர்வியூவில் ஒரே மாதிரியான மதிப்பெண் பெறும்பட்சத்தில் வயது அடிப்படையில் முன்னுரிமை என்பது வழங்கப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, அகமதாபாத், அமராவதி, பெங்களூர், போபால், புவனே்வர், சண்டிகர், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் உள்ளிட்ட சர்க்கிள்களில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். சென்னை சர்க்கிளை பொறுத்தவரை 88 காலியிடங்கள் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications