எஸ்.பி.ஐ வங்கியில் வேலை.. 2 ஆயிரம் பணியிடங்கள்.. நாளை தான் கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: எஸ்.பி.ஐ வங்கியில் ப்ரோபேசனரி ஆபிஸர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாளாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது படித்த பட்டதாரிகள் பலரது கனவாக இருக்கும். இதற்காக அவ்வப்போது வங்கி வெளியிடும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பதை காண முடியும்.

இந்த நிலையில், தான் எஸ்.பி.ஐ வங்கியில் ப்ரோபேசனரி ஆபிஸர் (PROBATIONARY OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 2,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி தகுதி: அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 1.04.2022 க்கு பிறந்தவர்களும் 02.04.1993 க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி/ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படுவது எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வு ஆகியவை நடைப்றும். இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
முதன்மை தேர்வு தமிழ்நாட்டின் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். மெயின் தேர்வு சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்திற்கு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.63 ஆயிரம் வரை கிடைக்கும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை செய்வதற்கான Bond (ரூ.2 லட்சம்) சமர்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் "Probationary Officers"ஆக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களின் probation காலம் 2 ஆண்டுகள் ஆகும். பயிற்சி காலத்தில் குறைந்தபட்ச தகுதியை எட்டாவிடில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்ள https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
தேர்வு கட்டணம்: தேர்வுக்கட்டணம்; தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
-
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications