எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேணுமா? 6 ஆயிரம் பணியிடம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: எஸ்.பி.ஐ வங்கியில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6,160 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே ஆர்வமும் தகுதியும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அப்ரெண்டிஸ் (பயிற்சி பணி) பணிக்கு ஆட்கள் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு.. தேர்வு கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெளிவாக காணலாம்.

மொத்த பணியிடங்கள்: மொத்தம் 6,160 பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 648 தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி பிரிவினர் 123 பேரும் எஸ்.டி பிரிவினர் 6 பேரும் ஒபிசி பிரிவில் 174 பேரும் EWS பிரிவில் 281 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் தேர்வு நடத்தப்படும். தகுதியான விண்னப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்
மாவட்ட வாரியாக: அரியலூர் (09 பணியிடங்கள்), செங்கல்பட்டு-21, சென்னை -86, கோவை-42, கடலூர் -11, தர்மபுரி -9, திண்டுக்கல் -16, ஈரோடு -16, கள்ளக்குறிச்சி -9, காஞ்சிபுரம் -26, கன்னியாகுமரி -23, கரூர்-9, கிருஷ்ணகிரி -12, மதுரை -32, மயிலாடுதுறை -9, நாகப்பட்டினம் -12, நாமக்கல் -9, பெரம்பூர், 9,புதுக்கோட்டை -9, ராமநாதபுரம் -9,ராணிப்பேட்டை 9, சேலம் -26, சிவகங்கை 9, தென்காசி 9,தஞ்சாவூர் 17, நிலகிரி 17, தேனி 14, திருவள்ளூர் 21, திருவாரூர் 9, திருச்சி 26, திருநெல்வேலி 17, திருப்பத்தூர் 9, திருப்பூர் 14, திருவண்ணாமலை 12, தூத்துக்குடி 18, வேலூர் 9, விழுப்புரம் 21, விருதுநகர் 16
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது நிரம்பியவர்களும் 28 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.1995 க்கு முன்பு பிறந்தவர்களும் 01.08.2023 க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: இந்த பயிற்சி பணியிடங்களை பொறுத்தவரை மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பிற சலுகைகள் எதுவும் வழங்க முடியாது. ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். பயிற்சி காலத்தை எந்த வித பிரச்சினைகளும் இன்றி முடித்தவர்களுக்கு ஜூனியர் அஸ்சோசியேட்ஸ் பணியிடங்களை நிரப்பும் போது வெயிட்டேஜ் மற்றும் தளர்வுகள் வழங்கப்படும். இது பற்றிய விவரம் அவ்வப்போது வெளியிடப்படும்.
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுகளை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கோவை, ஈரோடு,மதுரை, நாகர்கோவில், சேலம் , தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெறும். ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.
விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2023- அதாவது,இன்றைக்குள் விண்ணபிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/sbiaaug23/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications