இடைநிலை ஆசிரியர் வேலை.. தேர்வு எழுதிய ஆசிரியர்கள் மிஸ் பண்ணவே கூடாத வாய்ப்பு.. முக்கிய அறிவிப்பு
சென்னை: இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில், சிலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தவறான விவரங்களை குறிப்பிட்டனர். இதையடுத்து விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு நிர்ணயித்துள்ள ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தின்படி அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் கடந்த ஆண்டு இருந்தன. ஆனால் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் 1,768 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று காலியிடங்களின் எண்ணிக்கை 2,768 ஆக உயர்த்தப்பட்டது.

இதன்படி அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை பல்வேறு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதியிருந்தார்கள்.
ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில், சிலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தவறான விவரங்களை குறிப்பிட்டனர். இதையடுத்து விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில், சிலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதனை சரி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இதனைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம் 2024-க்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்று உள்ளவர்கள், எவரேனும் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை தெரிவித்திருந்தால் அதனை சரி செய்வதற்கான வாய்ப்பு மீண்டும் அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை கோரிக்கைக்குரிய ஆதார சான்றிதழ்களுடன் [email protected] இ-மெயில் முகவரிக்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் செயல்படும் குறைதீர் பிரிவில் நேரடியாகவோ நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் வழங்கலாம்.
அதன்பிறகு, பெறப்படும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இறுதிமுடிவு எடுக்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications