அனுபவம் வேண்டாம்.. Backend Developer பிரிவில் காலியிடங்கள்.. Seekho நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: நம் நாட்டில் பிரபலமான செயலிகளில் ஒன்றான சிஹோ நிறுவனத்தில் இருந்து பேக்எண்ட் டெவலப்பர் (Backend Developer - SDE1) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான விவரம் வருமாறு:
Seekho என்பது எஜூடெயின்மென்ட் செயலியாகும். இந்த செயலியில் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள் நிறைந்து உள்ளன.

தொழில் வளர்ச்சி, நிதி, வணிகம், தொழில்நுட்பம் உள்பட ஒவ்வொருவருன் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல வீடியோக்கள் இந்த செயலியில் உள்ளது.
இந்தி உள்பட பல பிராந்திய மொழிகளில் இந்த வீடியோக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த Seekho செயலியின் தலைமை அலுவலகம் பெங்களூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் சிஹோ நிறுவனத்தில் தற்போது பேக்எண்ட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 0-3 ஆண்டுக்குள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்கள் Building Scalable Backend Systems-ல் பணியாற்றி இருக்க வேண்டும். மேலும் எந்தவித பணி அனுபவமும் இல்லாதவர்களும் விண்ணப்பம்
செய்யலாம். அவர்களுக்கு சில முக்கிய தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிசைன் ஸ்கேலபிள், மெயின்டெயினபிள் மற்றும் பெர்பாமண்ஸ் பேக்எண்ட் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் டேட்டா ஸ்ட்ரைக்சர்ஸ் மற்றும் அல்காரிதமஸ் (Data Structures and Algorithms)மற்றும் ஓஓபிஎஸ் பிரின்சிபிள் (OOPs Principles)பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.
Integration RESTful APIs மற்றும் ஸ்கேலில் பேக்எண்ட் சர்வீஸில் பணியாற்றி இருக்க வேண்டும். அதேபோல் டேட்டாபேசில எஸ்க்யூஎல், NoSQL பற்றி தெரிந்திருக்க வேண்டும். மேலும் Query Optimization, Indexing, data modeling தெரிந்திருக்க வேண்டும். டீபக் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருப்பதோடு, ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.
எனவே எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இப்படி விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூ தேதி, நேரம், இண்டர்வியூ நடக்கும் இடம் உள்ளிட்டவை தெரிவிக்கப்படும். இண்டர்வியூவில் வெற்றி பெறுவோருக்கு பெங்களூரில் பணி நியமனம் செய்யப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications