ரயிலில் பயணிகளை தள்ளுவது, தூங்குவது, சாப்பிடுவது.. லட்சங்களில் சம்பளம் தரும் வித்தியாசமான வேலைகள்
சென்னை: ரயிலில் பயணிகளை உள்ளே தள்ளும் வேலை, தூங்கும் வேலை, சாப்பிடும் வேலை, சுற்றி பார்க்கும் வேலை, என பல விசித்திரமான வேலைகளுக்கு லட்சங்களில் சம்பளம் தரப்படுகிறது.. என்ன மாதிரியான வேலைகளுக்கு எந்த அளவிற்கு சம்பளம் தரப்படுகிறது. ஏன் அப்படி சம்பளம் தரத்தயாராக இருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
இன்று, ஒவ்வொரு தனிமனிதனும் நிறுவனங்களைத் தொடங்கிவிடுகிறார்கள். தனி மனிதர்கள், நம்முடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும் ஸ்டார்ட்-அப் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அதனால் நாம் அன்றாடம் செய்யும் தூங்குவது, சாப்பிடுவது என சில செயல்களுக்கு இப்போது சம்பளம் தருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? நம்பாவிட்டாலும் அது உண்மை. பலருக்கு வருமானம் தரும் அளவுக்கு அந்த வேலைவாய்ப்புகள் வளர்ந்துவிட்டது.

நாம் தூங்குவதற்கும் அழுவதற்கும் மாத சம்பளம் தருகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இந்த வேலைக்கு குறைந்த சம்பளம் தருவதாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.. இந்த வேலைகள் மூலம் பலர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். உலகில் இது போன்ற விசித்திரமான வேலைகளுக்கு லட்சங்களில் சம்பளம் தருகிறார்கள். அந்த மாதிரியான சில வேலைகளை பார்ப்போம்.
பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான Wakefit சமீபத்தில் தன்னிடம் வேலைக்கு சேர விரும்புவோருக்கு வித்தியாசமான வேலை தந்தது. அதாவது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்று வேலையை வழங்கியது. இந்தப் பணிக்காக அவர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த தூங்கும் வேலை எதற்கு என்றால், அந்நிறுவனம் தயாரிக்கும் மெத்தையை சோதிப்பது தான் நோக்கமாம். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், மெத்தையின் வசதியை சரிபார்க்க அதன் மீது தூங்க வேண்டும்.. அதுதான் வேலை..
தூங்கும் வேலை: இதேபோல், பின்லாந்தில் உள்ள பல ஹோட்டல்களும் மக்கள் தூங்குவதற்கு பணம் செலுத்துகின்றன. இந்த வேலையின் முக்கிய பங்கு ஹோட்டலில் வெவ்வேறு படுக்கைகளில் தூங்குவதுதான்.. பின்லாந்தில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள படுக்கைகளின் வசதியை ஆராய்வதற்காக இதுபோல் தூங்குவதற்கு லட்சங்களில் பணம் தரப்படுகிறது.
பாம்பு விஷத்தை பிரித்தெடுத்தல்: இந்த வேலை வெவ்வேறு பாம்புகள் மற்றும் தோர் விஷத்தை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தரப்படுகிறது. இவர்களின் வேலை என்னவென்றால், பாம்பு கடித்த பிறகு அந்த நபரின் உடலில் இருந்து பாம்பு விஷத்தை பிரித்தெடுப்பதாகும். இந்த நடைமுறையானது மாற்று மருந்து மற்றும் மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. இது ஒரு பணியாளரின் உயிரைப் பறிக்கக்கூடிய அதிக ஆபத்துள்ள வேலையாகும். இதில் உள்ள அபாயங்கள் காரணமாக இந்த வேலைக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. நம்மூரில் சேதுபதி படத்தில் வரும் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சி போல் தான் இந்த வேலை.. நடுக்கடலில் கப்பல் நின்றுவிட்டால் இறங்கி தள்ள வேண்டும் என்று செந்தில் கவுண்டமணியை பார்த்து சொல்வார் அல்லவா? அதுபோல் தான் பாம்பு விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையும்..
பயணிகளை தள்ளுவது: நியூயார்க், டோக்கியோ மற்றும் பெய்ஜிங் போன்ற பெரு நகரங்களில், மெட்ரோ ரயில் மற்றும் ரயில்களுக்குள் பயணிகளை தள்ள தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களின் வேலை என்னவென்றால், ரயில் நின்று புறப்படும் விசில் அடிக்கும்போது, கதவுகள் மூடப்படும்படி மக்களை உள்ளே தள்ளுகிறார்கள். Deutsche Bahn என்ற ஜெர்மனியில் உள்ள இரயில்வே நிறுவனம், Frankfurt என்ற பிரதான ரயில் நிலையத்தில் கூட்டத்தை நிலைப்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வமாக புஷ்ஷர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளது.

சாப்பிடும் வேலை: சாப்பிடுவதற்கு சம்பளம் தரப்படுகிறது. வகை வகையாக சமைக்கப்படுவதை ருசி பார்க்க வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். ஓட்டல்களில் உணவின் தரத்தை ஆராய்வது தான் இவர்களின் வேலை.. இதுதவிர சாப்பிடுபவர்கள் இப்போது பலர் அதையே சொந்த தொழிலாக செய்ய தொடங்கி உள்ளனர்.நிறைய யூடியூபர்கள் சாப்பிடுவதை வீடியோ எடுத்து போட்டு லட்சக்கங்களில் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். எங்கே என்ன சாப்பாடு கிடைக்கும் என்பதை தேடித்தேடி சாப்பிட்டு வீடியோ போடுபவர்களுக்கு காசு கல்லா கட்டுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுற்றுலா வேலை: இதேபோல் சும்மா ஊர் சுற்றி பார்த்தும் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். ஊர் ஊராய் சுற்றி பார்த்து அதனை வீடியோ எடுத்து யூடியூபில் ஏற்றி சம்பாதிக்கிறார்கள். இது தவிர சீரியல், படங்களை பார்க்கும் வேலையும் இந்தியாவில் பல்வேறு சேனல்களில் உள்ளது. அவர்களின் வேலை சீரியல், காமெடி, படம் பார்ப்பது தான், குவாலிட்டி செக்கிங் எனப்படும் இந்த வேலைக்கு எல்லா டிவி சேனல்களுமே கணிசமாக சம்பளம் தருகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications