அலுவலகம் செல்ல வேண்டாம்.. வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: பங்கு முதலீடு மற்றும் சில்லரை வர்த்தக துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்மால்கேஸ் நிறுவனத்தில் ப்ராடெக்ட் டிசைனர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். டிசைனிங் பிரிவில் திறமை மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யவதன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்.
Smallcase.. என்பது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் என்பது பங்கு முதலீடு துறையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பங்கு முதலீடு மற்றும் சில்லரை வர்த்த துறையில் வழிக்காட்டுதல்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு என்று பிரத்யேகமான செயலி உள்ளது. இந்த செயலியை மாதத்துக்கு 30 லட்சம் முதலீட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ‛ஸ்மால்கேஸ்’ நிறுவனத்தில் தற்போது ப்ரோடெக்ட் டிசைனர் - I (Product Designer - I) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ரூ.38,000 ஊதியம் + பல சலுகைகள்.. இன்டர்வியூ இன்றி என்பிசிஐஎல் அலுவலக வேலை! பெண்களுக்கும் வாய்ப்பு
அதன்படி பல்வேறு வகையிலான ஸ்கிரீன் சைஸ் மற்றும் பிளாட்பார்ம்களுக்கு ஏற்ற வகையி்ல் கிராப்ட்டிங் ப்ராடக்ட்ஸ் (Product Experiences) பணியில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Typography, font prirings, color theory & visual hierarchy தெரிந்திருக்க வேண்டும். மைக்ரோ இன்டரக்சன்ஸ் மற்றும் அனிமேஷன் ஆகியவற்றில் இன்டரக்சன்ஸ் திறமை கொண்டிருக்க வேண்டும்.
மேலும் யூஐ மற்றும் இன்டரக்சன் டிரைன் டூல்ஸில் Sketch/Figma/After Effects/Photoshop உள்ளிட்டவை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதோடு யுஎக்ஸ் பேட்டர்ன்ஸ் (UX Patterns), யுஐ பேட்டர்ன்ஸ்(UI Patterns) அறிந்து வைத்திருப்பதோடு, ப்ரோட்டோ டைப்பிங் மற்றும் இன்பர்மேஷன் ஆர்க்கிடெக்சர் (Prototyping & Information Architecture) தெரிந்திருக்க வேண்டும்.
‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. டிசைனிங் தெரிந்தாலே போதும்.. அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்.
இந்த பணி என்பது முழுநேரப்பணியாகும். அதேவேளையில் ‛ரிமோட்’ முறையிலான பணியாகும். அதன்படி வேலைக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Smallcase நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால் முடிந்தவரை இந்த பணியை விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தகுதி, அனுபவம், திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications