மத்திய அரசு ஊழியராகனுமா? எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 81 ஆயிரம் வரை சம்பளம்.. 10, +12 தகுதி தான்!
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 3,131 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு 81 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி 3,131 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10, +12 வகுப்பு கல்வி தகுதி கொண்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் குறிப்பாக மத்திய அரசு பணிகளில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் எஸ்.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து இருப்பார்கள். அந்த வகையில் தேர்வர்கள் எதிர்பார்த்த தேர்வு அறிவிப்புகளில் ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),
ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு:
18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC), ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்- ரூ. 19,900 - 63,200/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்- ரூ. 29,200 - 92,300/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ - ரூ. 25,500 - 81,100/-
தேர்வு முறை:
கணிணி முறையில் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். அதன்பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, பெண்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க வரும் 18.07.2025 கடைசி நாளாகும். தேர்வு நடைபெறும் நாள்: முதல் கட்ட தேர்வு 08.09.2025 to 18.09.2025, இரண்டாம் கட்ட தேர்வு: பிப்ரவரி - மார்ச் 2025-இல் நடைபெறும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsl_2025.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications