SSC Job: மத்திய அரசு வேலை.. 3,003 பணியிடங்கள்.. 10, 12 ஆம் வகுப்பு தகுதி தான்.. எஸ்எஸ்சி மெகா அறிவிப்பு
சென்னை: மத்திய அரசின் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் என அழைக்கப்படும் எஸ்.எஸ்.சியில் மொத்தம் 3003 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. சுருக்கெழுத்தாளர், ஸ்டோர் கிளர்க், துணை செவிலியர், இளநிலை மருந்தாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்து மேலும் விரிவான விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் பணி மேற்கொண்டு வருகிறது. காலியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும். தேர்வுகள் நடத்தப்பட்டு இதற்கான ஆட்சேர்ப்பு நடைபெறுவது வழக்கம்.

எஸ்.எஸ்.சி அறிவிப்பு
மத்திய அரசு பணி என்பதால், வேலை தேடும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், எஸ்.எஸ்.சி வெளியிடும் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில்தான் மெகா அறிவிப்பு ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* சுருக்கெழுத்தாளர் தரம் - II
* ஸ்டோர் கிளர்க்,
* மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
* பெர்சனல் அசிஸ்டண்ட்,
* பப்ளிக் ஹெல்த் நர்சிங் ஆஃபிசர்
* பொது சுகாதார செவிலியர் அதிகாரி
* மருத்துவ சமூக நல அதிகாரி
* துணை செவிலியர்
* இஜிசி தொழில்நுட்ப வல்லுநர் (இளநிலை)
* எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்
* சுகாதாரப் பணியாளர் (பெண்)
* இளநிலை மருந்தாளர்
* பணிமனை உதவியாளர்
என 87 வகையான பிரிவுகளில் மொத்தம் 3003 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிகிரி (துறைசார்ந்த பிரிவில்) உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக 35 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை:
கணினி வழியிலான தேர்வு, திறன் தேர்வு, டைப்பிங் டெஸ்ட், டேட்டா எண்ட்ரி தேர்வு ஆகியவை நடைபெறும்.
கணினி வழி தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். இவை பொது அறிவுத்திறன் (25 கேள்விகள்), பொது விழிப்புணர்வு (25 கேள்விகள்), அளவுசார் திறன் (25 கேள்விகள்) மற்றும் ஆங்கில மொழி (25 கேள்விகள்) ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.50 மதிப்பெண்கள் நெகட்டிவ் மதிப்பெண்ணாகக் கழிக்கப்படும்.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுவை ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ரூ.100 விண்ணப்ப கட்டணம் ஆகும். பெண்கள் எஸ்டி/எஸ்சி, உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 13.04.2026
* விண்ணப்பிக்க கால அவகாசம் முடியும் நாள்: 04.05.2026
* தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 05.05.2026
* விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான நாள்: 11.05.2026 to 13.05.2026
* கணினி வழி தேர்வு நடைபெறும் மாதம்: June, 2026 (Tentative)
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2026_phase_xiv.pdf
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications