10ம் வகுப்பு முடிச்சிருந்தாலே போதும்.. மத்திய அரசில் சூப்பர் வேலை வாய்ப்பு.. செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: மத்திய அரசின் எஸ் எஸ் சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மல்டி டாஸ்கிங்க் மற்றும் ஹவல்தார் பதவிகளுக்கு மொத்தம் 8,326 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். வயது வரம்பு என்ன? விண்ணப்பிப்பது எப்படி? போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகளை வெளியிட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் என பல்வேறு வசதிகள் இருப்பதால் போட்டி தேர்வுக்கு தயாராகும் பலரும் எப்படியாவது அரசு பணிக்கு சென்று விட வேண்டும் என்ற வேட்கையுடன் தீவிரமாக படித்து வருவதை பார்க்க முடியும். போட்டி தேர்வர்கள் எதிர்பார்த்து இருந்த தேர்வு அறிவிப்புகளில் ஒன்றை எஸ்.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்:
மல்டி டாஸ்கிங்க் (எம்.டி.எஸ்)- 4,887 பணியிடங்கள்.
ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) - 3439 பணியிடங்கள்.
என மொத்தம் 8,326 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
இரண்டு பணியிடங்களுக்குமே விண்ணப்பிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை 7-வது ஊதிய கமிஷன் விதிகளின் படி வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கணிணி வழி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஹவல்தார் பணிக்கு கணிணி வழி தேர்வுடன் உடல் தகுதி தேர்வும் நடைபெறும். கணிணி வழி தேர்வை பொறுத்தவரை இந்தி, ஆங்கிலம், அசாம், பெங்காலி, குஜராத்தி, கன்னட, கொன்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகள்ல் நடைபெறும்.
தேர்வு மையங்கள்:
விண்ணப்பதாரர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு மொழியை தேர்வு செய்து தேர்வை எழுதலாம். நாடு முழுக்க முக்கிய நககரங்களில் தேர்வு நடைபெறும் . தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுச்சேரியிலும் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து அறிந்து கொண்ட பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் எதுவும் கிடையாது. பிற பிரிவினருக்கு 100 கட்டணம் உண்டு. ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31.07.2024 கடைசி நாள் ஆகும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://ssc.gov.in/ இங்கே கிளிக் செய்யவும்.












Click it and Unblock the Notifications