மத்திய அரசில் ஸ்டெனோகிராபர் வேலை.. 12ம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா.. செம சான்ஸ்! 3 நாள்தான் இருக்கு
சென்னை: மத்திய அரசின் கிரேட் சி & டி பிரிவுகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 2,006 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம். விண்ணப்பிக்க கால அவகாசம் இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது.
ஸ்டாப் செலக்ஷன் எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம், மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. சுருக்கமாக எஸ்.எஸ்.சி என்று அழைக்கப்படும் இந்த ஆணையம் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது.

அந்த வகையில் தற்போது ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மொத்தம் 2006 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்..
கல்வி தகுதி: ஸ்டெனோகிராபர் கிரேட் சி & டி பணிகளுக்கு மொத்தம் 2,006 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: கிரேட் சி பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அதாவது, விண்னப்பதாரர்கள் 02.08.1994 க்கு முன்பு பிறந்தவர்களும் 01.08.2006 க்கு பிறகு பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
கிரேட் டி பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27 ஆகும். அதாவது 1997க்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகள் என்றால், 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: கணினி வழியிலான எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திறன் தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு டைப்பிங் திறன் சோதிக்கப்படும். இது குறித்த விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தெளிவாக இடம் பெற்றுள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது?: தேவையான கல்வி தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 17.08.2024 கடைசி நாளாகும். அதாவது இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_steno_2024_07_26.pdf செய்யவும்.












Click it and Unblock the Notifications