நீங்கள் 12ம் வகுப்பு மட்டுமே படித்தவரா.. மத்திய அரசு பணியில் சேர பொன்னான வாய்ப்பு
சென்னை: நீங்கள் 12வது மட்டுமே படித்தவர்களா.. மத்திய அரசு பணியில் சேர விரும்புகிறீர்களா.. இந்த முறை 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பலரும் விண்ணப்பிக்கலாம் என்ற அடிப்படையில் இரண்டாவது முறையாக அவகாசத்தை அரசு நீட்டித்து, இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பொதுவாக தற்போதைய சூழலில் மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு தமிழகத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது. ஐஏஏஸ், ஐபிஎஸ் பணிகள் தொடங்கி, வருமான வரித்துறை, ரயில்வே துறை, மத்திய அமைச்சக பணிகள் என பலவற்றுக்கும் தமிழகத்தில் ஆர்வம் குறைந்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், பலரும் மருத்துவம், சாப்ட்வேர் துறையில் ஆர்வம் காட்டுவதும், வெளிநாடுகளில் தொழில்நுட்ப வேலைகளில் ஆர்வம் காட்டுவதையும் காரணமாக கூறலாம். இன்னொரு காரணம் போதிய விழிப்புணர்வு இன்மையை காரணமாக கூறலாம்.

எவ்வளவு வேலைகள்
மக்கள் மீண்டும் ஆர்வம் காட்டினால் மட்டுமே தமிழர்கள்அதிக அளவில் மத்திய அரசு பணிகளில் சேர முடியும். சரி விஷயத்துக்கு வருவோம். மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையம் combained higher secndary level (ssc chsl) தேர்வு மூலம் lower divisional clerk/ junior secretiat assistant, postal assistant/ sorting assistant and data entry operator ஆகிய பணியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த அறிவிப்பு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொன்னான வாய்ப்பு ஆகும்.

விண்ணப்பிக்கலாம்
இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை இரண்டாவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில்கொண்டு ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இறுதி தேதியை 15.12.2020ல் இருந்து 19.12.2020 ஆக நீட்டித்த மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் தற்போது 26.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என காலஅவகாசத்தை நீட்டித்துள்ளது.

எங்கு எவ்வளவு பணி
விளம்பர விவரத்தை இப்போது பார்ப்போம்:
மொத்த பணியிடங்கள்: 4,726Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் ரூ. 19,900-63,200
Postal Assistant/ Sorting Assistant
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Data Entry Operator (DEO)
Data Entry Operator, Grade ‘A'
சம்பளம்: மாதம் ரூ.25,500-81,100
தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். இரண்டு கட்ட தேர்வு மற்றும் திறன் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி நாள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2020.












Click it and Unblock the Notifications