நல்ல வாய்ப்பு! 10ம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.69,100 வரை சம்பளம்.. மத்திய ஆயுத படைகளில் 75,764 பணி
சென்னை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 75,768 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்), மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்), மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) உள்பட பல படைகள் உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission Or SSC) சார்பில் இந்த படைகளில் உள்ள கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
காலியிடங்கள்: தற்போதைய அறிவிப்பின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 8 படைகளில் மொத்தம் 75,768 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி வாரியாக பார்த்தால் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் 27,875 பேர், மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பிரிவில் 8,598 பேர், மத்திய ரயில்வே போலீஸ் படை (சிஆர்பிஎப்) பிரிவில் 25,427 பேர், எல்லை ஆயுதப்படை (எஸ்எஸ்பி) பிரிவில் 5,278 பேர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் (ஐடிபிபி) பிரிவுக்கு 3,006 பேர், அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) பிரிவுக்கு 4,776 பேர், ஸ்பெஷல் செக்யூரிட்டி போர்ஸ் (எஸ்எஸ்எப்) பிரிவுக்கு 583 பேர், என்ஐஏ (என்ஐஏ) பிரிவுக்கு 225 பேர் என மொத்தம் 75,768 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி-வயது வரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூடி(பொது) பிரிவினர் என்றால் 10 வயது வரையும், பிடபிள்டி (ஓபிசி) பிரிவினர் என்றால் 13 வயது வரையும், பிடபிள்யூடி(எஸ்சி/எஸ்டி) பிரிவினர் என்றால் 15 வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ssc.nic.in இணையதளம் மூலம் நவம்பர் 24 முதல் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல், சிபிடி தேர்வு (Computer Based Examination), உடல் திறனறி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மெடிக்கல் எக்ஸாமினேஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications