எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 600 பணியிடங்கள்.. 85 ஆயிரம் சம்பளம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். ஏனென்றால் இன்றே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கி உள்ளது. நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வங்கியில் பணியாற்றி வருகிறார்கள். இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது இந்த வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்பதை இங்கு பார்க்கலாம்.
காலிப்பணியிடங்கள் விவரம்: எஸ்பிஐ வங்கியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளுக்கான 600 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருந்தால், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி மற்றும் இவிஎஸ் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 15 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளம் மாதம் ரூ.48,000 முதல் 85,000 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை: இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறும். முதலில் முதல்நிலை தேர்வு நடைபெறும். பிறகு மெயின் தேர்வும், குரூப் டிஸ்கசன்ஸ், இண்டர்வியூ மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி இதில் எந்த மொழியில் தேர்வு எழுத வேண்டும் என்பதை விண்ணப்பதாரர்களே தேர்ந்தெடுக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற இணையதள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இன்றே 16.01.2025 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications