Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1,299 பணியிடங்களுக்கான சப் இன்ஸ்பெக்டர் தேர்வு.. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் கடும் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நீண்ட இழுபறிக்கு ஒருவழியாக வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காவல்துறையில் ஏற்படும் சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் உள்ளிட்ட பணியிடங்களை சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது.

sub-inspector-recruitment-exam-for-1-299-posts-held-after-two-years-intense-competition-expected

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு

இதில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு, போலீஸ் வேலை கனவுடன் இருக்கும் பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கும் ஒரு தேர்வாக உள்ளது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

போலீஸ் நிலையங்கள் மற்றும் ஆயுதப் படையில் பணியாற்றுவதற்காக இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழக போலீசில் நடைபெறும் தேர்வுகளில் இது முக்கியமான போட்டித் தேர்வாகும். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இத்தேர்வை நடத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஒரே தேர்வாக நடத்த கோரி

2023-ம் ஆண்டு நடந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு முடிவை வெளியிடாமல் தற்போது தேர்வு நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால் தள்ளிப் போனது. இதற்கு மத்தியில் துறையைச் சேர்ந்தவர் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதுவதிலும், பொது ஒதுக்கீட்டில் தேர்வு பெறுபவர்களுக்கும் இடையே பணி நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் துறை ஒதுக்கீடு மற்றும் பொது ஒதுக்கீட்டுக்கான தேர்வை தனித்தனியே நடத்தாமல் ஒரே தேர்வாக நடத்த வேண்டும் எனவும் இவ்வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை நடத்துவதற்கான பணிகளை சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வந்தது.

40-க்கும் மேற்பட்ட மையங்களில்

அந்த வகையில், சப் இன்ஸ்பெக்டர் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுத உள்ளனர். ஆண்கள், பெண்கள் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருந்தனர். தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சப் இன்ஸ்பெக்டர் தேர்வை நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இந்த முறை பதவி உயர்வுக்காக தேர்வு எழுதுபவர்களும், பொதுத் தேர்வர்களுக்கும் ஒன்றாக தேர்வு நடைபெறுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வு நடக்கிறது.

இரு கட்டமாக தேர்வு

காலை மற்றும் பிற்பகல் என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 8 மணிக்குள் மையத்திற்கு வர வேண்டும். 12.30 மணி வரை இத்தேர்வு நடைபெறும். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் தமிழ் தகுதித் தேர்வு மாலை 5.10 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த முறை தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு மதியம் தேர்வு முடிந்தவுடன் வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு பின்னர் உள்ளே வர அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது தேர்வு எழுதும் வளாகத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை. உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் இத்தேர்வு நடக்க உள்ளது.

2 ஆண்டுகளுக்கு பிறகு

2 ஆண்டுகளுக்கு பிறகு சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெறுவதால் இளைஞர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த சில மாதங்களாக இத்தேர்வுக்காக பயிற்சி மையங்களில் தயாராகி வந்தனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தில் பலர் இரவு-பகலாக படித்து தேர்வுக்கு தயாராகி உள்ளனர். கான்ஸ்டபிள் பணியில் இருக்கும் தேர்வர்களுக்கு பணி நேரத்திற்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்திலும் இந்த தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+