உச்ச நீதிமன்றத்தில் வேலை.. ரூ.1 லட்சம் சம்பளம்! இப்படியொரு சான்ஸ் கிடைக்காது.. தட்டி தூக்குங்க
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்ட எழுத்தர் (Law Clerk) - ஆராய்ச்சி உதவியாளர் பதவியில் 90 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் உயரிய நீதித்துறை அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் அலுவல் ரீதியிலான பணியிடங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

பணியிடங்கள் விவரம்:
அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் 90 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
சட்ட எழுத்தர் (Law Clerk) - ஆராய்ச்சி உதவியாளர் - 90 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து இளங்கலை சட்டம் (BL) முடித்திருக்க வேண்டும். இந்திய பார் கவுன்சிலில் அட்வகேட் ஆக பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் திறன் அவசியம். ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன்கள், கணினி பற்றிய அறிவு அவசியம்.
வயது வரம்பு:
20 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு:
சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- வழங்கப்படும். இப்பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது ஆகும்.
தேர்வு முறை எப்படி?
தேர்வு முறையைப் பொறுத்தவரை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுக்க முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்டவை இருப்பவர்கள் https://www.sci.gov.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க 20.01.2026 அவகாசம் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 07.02.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
https://www.sci.gov.in/recruitments/
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications