ஏதாவது ஒரு டிகிரி படிச்சிருந்தா போதும்! உச்ச நீதிமன்றத்தில் வேலை.. 72,000 சம்பளம்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 241 ஜூனியர் கோர்ட்டு அஸ்சிஸ்ட்னட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கு முறை, தேர்வு முறை உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் விரிவாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றம் தலைநகர் டெல்லியில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அலுவல் பணிகளிலும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் ஏற்படும் அலுவல் பணியிடங்கள் நீதிமன்றத்தால் உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் ஜூனியர் கோர்ட் அஸ்சிஸ்டண்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: 241 - ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் (Group 'B' Non-Gazetted)
கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். கணினியில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்று இருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்து இருத்தல் அவசியம்.
வயது வரம்பு: ஜூனியர் அசிஸ்டண்ட் பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.72,040 சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை எழுத்து தேர்வு, டைப்பிங் டெஸ்ட்/கம்ப்யூட்டர் டெஸ்ட் ஆகியவை மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய நகரங்களில் நடைபெறும். புதுவையிலும் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் ரூ. 250 கட்டணம் செலுத்தினால் போதும். ஆன்லைன் வழியாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.sci.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 08.03.2025 கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2025/02/2025020434.pdf
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications